twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சில்க் பற்றி படம்: 'என்ன வெளையாடறானுங்களா?' - எகிறும் வினு சக்ரவர்த்தி

    By Shankar
    |

    Silk Smitha and Vinu Chakravarthy
    நடிகை சில்க் ஸ்மிதா பற்றி என்னைக் கேக்காம படம் எடுக்கிறாங்கன்னு கேள்விப்பட்டேன்... என்ன வெளையாடறானுங்களா... சும்மா விட மாட்டேன். கேஸ் போடுவேன். படத்தைத் தடுப்பேன்," என்றார் நடிகர் வினு சக்ரவர்த்தி.

    மர்மமாக இறந்துபோன பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை இந்தியில் 'த தர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் படமாக்குகின்றனர். சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.

    இந்தத் தகவல் தெரிந்ததிலிருந்து மிகவும் கொந்தளிப்பில் இருக்கிறார் நடிகர் வினு சக்கரவர்த்தி.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "சில்க் ஸ்மிதாவை நான்தான் சினிமாவில் அறிமுகம் செய்தேன். வண்டிச் சக்கரம் படத்தின் கதையை உருவாக்கி விட்டு சில்க் ஸ்மிதா வேடத்துக்கு நடிகை தேடினேன். ஏ.வி.எம். ஸ்டூடியோ எதிரில் நின்ற போது எதிரே மாவு அரைத்துக் கொண்டு சில்க் ஸ்மிதா சென்றார். அவர் கண்களின் வசீகரம் ஈர்த்தது.

    அப்போது அவருக்கு 16 வயசுதான். அப்பா, அம்மா இல்லை. உறவினர்களிடம் பேசி 6 மாசம் ட்ரெயினிங் கொடுத்து வண்டிச் சக்கரம் படத்தில் அறிமுகம் செய்தேன். விஜயலட்சுமி என்ற அவரது பெயரும் சில்க் ஸ்மிதா என மாற்றப்பட்டது. அந்த படம் 1980-ல் வந்தது. அதன் பிறகு நிறைபட வாய்ப்புகள் வந்தன. 30-வது வயதில் அவர் மர்மமாக இறந்து போனார்.

    சில்க் ஸ்மிதாவின் ரகசியங்கள் அனைத்தும் எனக்குத்தான் தெரியும். எல்லா விஷயங்களையும் என்னிடம் தெரிவித்துள்ளார். அவர் வாழ்க்கையை நானே படமாக்க முடிவு செய்துள்ளேன். சிலுக்கு என்ற பெயரை பதிவும் செய்துள்ளேன். சில்க் வேடத்தில் நடிக்க நமீதாவிடம் பேசியுள்ளேன்.

    இந்த நிலையில் சில்க் வாழ்க்கையை படமாக்குவதாக சொல்கிறார்கள். யாரைக் கேட்டு இந்தக் கதையை எடுக்குறானுங்க. என்ன வெளயாடறானுங்களா... இந்தக் கதைக்கு முழு சொந்தக்காரன் நான்தான். இன்னொன்னு, சிலுக்கு வேடத்துக்கு வித்யாபாலனை தேர்வு செய்துள்ளதாகவும் அறிந்தேன். இதிலேயே தெரியுது அவங்களுக்கு எவ்வளவு மட்டமான டேஸ்டுன்னு. சில்��் ஸ்மிதா வேடத்துக்கு வித்யாபாலன் பொருத்தமானவர் அல்ல. ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோனே போன்றோர்தான் பொருத்தமாக இருப்பார்கள். தமிழில் எடுத்தால் நமீதாவை வைத்து எடுக்கலாம்.

    என் எதிர்ப்பையும் மீறி இந்தில எடுத்தா, கண்டிப்பா போராட்டம் நடத்துவேன். சென்சார் போர்டு அலுவலகம் முன்னாடி தர்ணா பண்ணுவேன்," என்றார் வினுசக்ரவர்த்தி.

    English summary
    Veteran actor Vinu Chakravarthy opposed filming Silk Smitha life in Hindi with actress Vidhya Balan. In an interview the actor told that he has already registered the story in Film chamber a few years back and planned to filming with Namitha in Tamil.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X