அஜீத்துடன் மோதலா?- கெளதம்

அப்போதைக்கு இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசாமல் மௌனம் சாதித்து வந்த கௌதம் மேனன், இப்போது அதுகுறித்து பதிலளித்துள்ளார்.
மேனன் அளித்துள்ள பதில்:
வாரணம் ஆயிரம் என்னைப் பொருத்தவரை வெற்றிப் படம்தான். இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டுள்ள படம். இப்போது 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படப்பிடிப்பில் இருக்கிறேன். இந்தப்படம் முடிந்ததும் 'ஜொஸ்சி' என்ற தெலுங்கு படத்தையும் இயக்குகிறேன்.
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜீத் நடிக்கவிருந்த படத்தை நானாகத்தான் இயக்க மறுத்தேன். தயாரிப்பாளர் என்னை நீக்கியதாகக் கூறுவது தவறு.
அஜீத் படத்தை இயக்க அழைப்பு வந்தபோது நான் வாரணம் ஆயிரம் படத்தின் இறுதி கட்ட வேலைகளில் இருந்தேன். பட வேலைகளை முடிக்க எனக்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் அதை ஏற்கவில்லை. உடனே கதை கேட்டு நிர்ப்பந்தித்தார். அதற்கு என்னால் உடன்பட முடியவில்லை.
எனவே தான் அஜீத் படத்தை இயக்கவில்லை. மற்றபடி அஜீத்துடன் எனக்கு எந்த மோதலும் இல்லை.
அஜீத்தும் நானும் இன்னொரு படம் மூலம் கண்டிப்பாக சேருவோம். அஜீத் சிறந்த நடிகர். பெரிய ரசிகர் பட்டாளமே அவருக்கு இருக்கிறது.
வெளியில் நான் செல்லும்போது என்னை சந்திக்கும் பலரும், 'எப்ப எங்க தல படத்தை டைரக்டர் செய்யப் போறீங்க?' என்று கேட்கிறார்கள்.
ரசிகர்களுடன் அவர் மிகவும் நெருக்கமாக உள்ளார். அதனால்தான் அவர்கள் இத்தனை அன்பு செலுத்துகிறார்கள். வருடன் நான் பணியாற்றுவது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும் என்கிறார் கௌதம்.


Click it and Unblock the Notifications











