60% சொந்த கதை தான் பாஸ்.. மாமனார் கோவிச்சுக்கிட்டார்.. 2 ஸ்டேட்ஸ் இயக்குநர் கலாட்டா பேட்டி!
சென்னை: 2 ஸ்டேட்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் ஜாக்கி எஸ். குமாரின் செம கலாட்டாவான பேட்டி வெளியாகி இருக்கிறது.
Recommended Video
லாக்டவுன் அறிவிப்புக்கு வெறும் 5 நாட்கள் முன்பு தான் இவரது படம் தியேட்டரில் வெளியானது.
ஆனால், 5 நாட்களுக்கு பிறகு தியேட்டர்களில் இருந்து நீக்கப்பட்ட 2 ஸ்டேட்ஸ் திரைப்படம், இப்போ ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

ஏற்கனவே பாலிவுட்டில் நடிகை ஆலியா பட், அர்ஜுன் கபூர் நடிப்பில் தமிழ் பெண்ணுக்கும், இந்தி பையனுக்கும் உருவாகும் காதல் கதை 2 ஸ்டேட்ஸ் என்கிற பெயரில் வெளியாகி ஹிட் அடித்தது.
இந்த படத்தின் கதை தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த இளைஞர்களின் காதல் கதை தான்.
தமிழ்நாட்டு பையனான ஜாக்கி எஸ். குமார், தனது வாழ்க்கை கதையையே படமாக்கி இருப்பது தான் இந்த படத்தின் சூப்பரான ஹைலைட் விஷயமே. ஆனால், பேட்டியில் வெறும் 60 சதவீதம் தான் உண்மை என கொஞ்சம் தன்னடக்கம் மற்றும் தற்காப்புடன் பேசி தப்பித்துக் கொள்கிறார்.

ஈ, எறும்புக்கே துரோகம் செய்யாத இவருடைய மாமனாரை வில்லனாக படத்தில், காட்டி, அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட கதையையும் அப்படியே ஒளிவு மறைவு இல்லாமல் பேட்டியில் போட்டு உடைத்து கலகலப்பாக்கி உள்ளார் இயக்குநர் ஜாக்கி.
டொவினோ தாமஸ் படத்தில் நடித்த மனு பிள்ளை மற்றும் சரண்யா நாயர் இந்த படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











