நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா

By Sudha

Tamanna
நடிப்புதான் எப்போதுமே நடிகைகளுக்கு கை கொடுக்கும். அதை மட்டுமே உறுதியாக நம்ப முடியும். ஆனால் கவர்ச்சியை மட்டும் நம்பியிருந்தால் தோல்வியில்தான் போய் முடியும் என்று தத்துவார்த்தமாக பேசுகிறார் தமன்னா.

இன்றைய தேதிக்கு தமிழ் ஹீரோக்கள் அதிகம் விரும்பும் நாயகியாக தமன்னா கோலோச்சி வருகிறார். தமன்னாவுடன் ஜோடி சேர ஹீரோக்களுக்கிடையே கடும் போட்டா போட்டியாம். இதனால் தமன்னா இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார், கால்ஷீட் புக் நிரம்பி வழிய ஓடி ஓடி நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழின் நம்பர் ஒன் நாயகியாகி விட்ட பூரிப்பில் இருக்கும் தமன்னாவிடம் உங்களது கவர்ச்சி அதிகம் பேசப்படுகிறதே என்று கேட்டால், நிச்சயம் கவர்ச்சியை மட்டும் மூலதனமாக வைத்து நான் நடிக்கவில்லை. கவர்ச்சியை விட நடிப்புதான் மிக முக்கியம்.

நடிப்புதான் நடிகைகளுக்கு கை கொடுக்கும். கவர்ச்சியை வைத்து நீண்ட நாட்கள் இருக்க முடியாது. ஆனால் நடிப்புத் திறமை நெடு நாட்களுக்கு நமக்கு வாய்ப்புகளைத் தேடித் தரும். நம்மை மற்றவர்கள் மறந்து விடாமல் காப்பாற்றும்.

நான் கல்லூரி படத்தில் நடித்ததன் மூலம் இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டேன்.

நான் ஒவ்வொரு படத்தையும் ஒப்புக்கொள்வதற்கு முன்பு அதன் கதை, எனது கேரக்டர் குறித்து நன்கு கேட்டுக் கொள்கிறேன். அது நன்றாக இருந்தால்தான், எனக்குப் பிடித்திருந்தால்தான் நடிக்க ஒப்புக் கொள்கிறேன் என்கிறார் தமன்னா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X