இந்தியில் விஜயகாந்த்தின் அரசாங்கம்

By Staff

Madesh with Sheryl Pinto
விஜயகாந்த் நடித்துள்ள அரசாங்கம் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக அந்தப் படத்தின் இயக்குநர் மாதேஷ் அறிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளேன்.

இந்த படம், விஜயகாந்தின் வழக்கான பஞ்ச் டயலாக், அதிரடி சண்டைகள் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக அமைந்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

ரொம்ப பேசாத, கெட்டவர்களை உதைத்து விரட்டாத வித்தியாசமான விஜயகாந்த்தை காட்டவேண்டும் என்பதற்காக நான் எடுத்த முயற்சிதான் அரசாங்கம். இதில் முழுக்க தனது புத்திசாலித்தனத்தால் விஜயகாந்த் நினைத்த காரியத்தை சாதிப்பது போல எடுத்திருந்தேன். நான் எதிர்பார்த்தபடியே படம் வெற்றி பெற்றுள்ளது.

அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், ஷாரூக் கான் போன்ற முன்னணி பாலிவுட் நடிகர்களுக்கு இந்த படத்தை போட்டுக் காட்டினேன். படம் நன்றாக வந்திருப்பதாக பாராட்டு தெரிவித்த அவர்களில் நடிகர் அஜய்தேவ்கன் மட்டும் இதன் இந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.

எனவே எனது அடுத்த படம் அரசாங்கத்தின் இந்தி ரீமேக். படத்தில் வேறு யார் நடிக்கிறார்கள், டெக்னிகல் குழு பற்றி பின்னர் தெரிவிப்பேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X