'எப்படித்தான் இந்தமாதிரி செய்தி பரவுதோ...' புலம்பும் அசின்!

கஜினி என்ற ஒரே படத்தில் பாலிவுட்டின் முன்னணி நாயகியாகிவிட்டவர் தமிழ்- மலையாள நடிகை அசின். தொடர்ந்து சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்தார்.
விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, சல்மானுடன் நெருக்கமாகிவிட்டதாக அசின் குறித்து செய்திகள் பரவின. சல்மான் கான் ஏராளமான பரிசுகளை அசினுக்கு வாங்கி கொடுக்கிறார் என்றும், இதனால் அவருக்கும் அவர் காதலி காத்ரீனா கைபுக்கும் சண்டை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க அசினுக்கு வாய்ப்பு வந்ததாகவும், அதில் நடிக்க கூடாது என்று சல்மான்கான் தடுத்ததால் அசினும் ஷாரூக்குக்கு மறுப்பு சொல்லிவிட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
தன்னைச் சுற்றிய இத்தகைய பரபரப்புச் செய்திகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் அசின் கூறியுள்ளதாவது:
"நான் இதுவரை இந்தியில் 'கஜினி" என்ற ஒரு படம்தான் நடித்திருக்கிறேன். அதற்குள் இங்குள்ள முன்னணி இந்தி நடிகர்களுடன் இணைத்து கிசுகிசுக்கிறார்கள். நான் அளிக்கும் பேட்டிகள் பெரும்பாலும் வதந்திகளுக்கு பதில் சொல்வதாகவே அமைந்துவிடுகிறது.
'லண்டன் டீரீம்ஸ்" படத்தில் சல்மான் கானுடன் நடித்தேன். நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இதைத்தவிர வேறு எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. கேத்ரினா கைப்புக்கும், எனக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் சொல்கிறார்கள். இதுவரை கேத்ரினாவை சந்தித்தது கூட இல்லை.
ஷாரூக்குடன் நடிக்க ஆசை...
ஃபராகான் இயக்கும் 'ஹாப்பி நியூ இயர்' படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுவதிலும் உண்மையில்லை. ஃபராகான் என்னுடைய மிகச் சிறந்த தோழி. அவர் இப்போதுதான் புதிய படத்துக்கு ஸ்கிரிப்ட் உருவாக்கி வருகிறார். யாரை நடிக்க வைப்பது என்பதை அவர்தான் முடிவு செய்வார். இதுபற்றி அவர் என்னுடன் டிஸ்கஸ் பண்ணவில்லை.
ஆனால் எல்லாரையும்போல எனக்கும் ஷாருக்கானை ரொம்பப் பிடிக்கும். அவருடன் நடிக்க மிக ஆசையாக இருக்கிறேன். இவருடன் நடிக்க வேண்டாம் என சல்மான்கான் சொன்னதாகவும் அதனால் மறுத்துவிட்டேன் என்றும் வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.
எப்படித்தான் என்னைப் பற்றி மட்டும் இப்படி தப்புத் தப்பான வதந்திகள் பரவுகிறதென்றே தெரியவில்லை.
எனக்கு எல்லா நடிகர்களுடனும் நல்ல நட்பு உள்ளது. நட்பு மட்டும்தான்... வேறொன்றுமில்லை" என்று சிணுங்குகிறார் அசின்.


Click it and Unblock the Notifications











