உதட்டோடு உதடு முத்தம்! - அசின் ஆவேசம்
ரெடி படத்தில் சல்மான்கானுடன் உதட்டோடு உதடு வைத்து முத்தக் காட்சியில் நடித்ததாக வரும் செய்திகளை ஆவேசமாக மறுத்துள்ளார் அசின்.
அசினும், சல்மான்கானும் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர் ரெடி படத்துக்காக. இவர்கள் இருவரும் இணைந்த முதல் படமான லண்டன் ட்ரீம்ஸ் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியைத் தழுவியது.
ரெடி படம் இலங்கையில் படமாக்கப்பட்டது. இந்தப் படப்பிடிப்பின்போது அசினும் சல்மானும் மிக நெருக்கமாகிவிட்டதாகவும், படத்தின் பல காட்சிகளில் அந்த நெருக்கம் எதிரொலித்துள்ளதாகவும் செய்தி வெளியானது.
சல்மான்கானை உதட்டோடு உதடு முத்தமிட்டுள்ளதாகவும், படுக்கையறைக் காட்சிகளிலும் நெருக்கம் காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இக்காட்சிகள் படத்தில் மிகவும் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றி அசினிடம் கேட்டபோது, ஆவேசப்பட்டார். அவர் கூறுகையில், "என்னைப்பற்றி அவ்வப்போது நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. அதில் இதுவும் ஒன்று. நான் இதுபோன்ற காட்சியில் நடிக்கவில்லை. இனிமேலும் நடிக்க மாட்டேன்.
ரெடி படத்தின் முத்தக் காட்சிக்கு அவசியமே இல்லை. அது குடும்பப் பாங்கான படம்.
எனக்கும், சல்மான்கானுக்கும் நெருக்கமாக காட்சிகள் எதுவும் அதில் கிடையாது. முத்தமிடவும் இல்லை. நான் நீச்சல் உடையில் நடித்திருப்பதாகவும் படுக்கையறைக் காட்சியில் நெருக்கம் காட்டியுள்ளதாகவும் புரளி கிளப்பியுள்ளனர்.
அதுமட்டுமா, சல்மான்கானையும், என்னையும் இணைத்து திருமண கிசுகிசுக்கள் வந்தன.
இவற்றில் எதுவும் உண்மை இல்லை. ஆனால் சல்மான்கானை எனக்கு மிகவும் பிடிக்கும். பழக மிகவும் னிமையானவர். ரெடி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமானபோது எனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. டிஸ்சார்ஜ் ஆனபிறகும் சிகிச்சைப் பெற்றுக் கொண்டேன். அப்போதெல்லாம் சல்மான்கான்தான் மிகவும் உதவினார். ஒவ்வொரு வேளையும் எனக்கு ஞாபகப்படுத்தி மருந்து சாப்பிட வைத்தார்", என்றார்.


Click it and Unblock the Notifications











