எனக்கு கல்யாணமாகவில்லை-திவ்யா தத்தா

பாலிவுட்டின் கவர்ச்சிமிகு நடிகைகளில் ஒருவர் திவ்யா தத்தா. பஞ்சாபைச் சேர்ந்தவர் ஏராளமான பஞ்சாபிப் படங்களிலும் இந்தியிலும் நடித்துள்ளார்.. டெல்லி 6 படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் விக்கிபீடியாவில் உள்ள தனது புரஃபைலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காரணம், அதில் திவ்யா தத்தாவுக்கு கல்யாணமாகி விட்டதாக கூறப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கல்யாணமாகாத பெண். கல்யாணம் நடந்தால் அதுதான் எனது வாழ்க்கையில் மிகப் பெரிய நாளாக இருக்கும். எனவே நான் கல்யாணத்தை மறைக்க மாட்டேன். எல்லோரிடமும் சொல்லி விட்டே செய்வேன்.
இப்படி இருக்கையில் எப்படி எனக்கு கல்யாணமாகி விட்டதாக போட்டார்கள் என்று கொந்தளித்தார் திவ்யா.
சம்பந்தப்பட்ட பக்கத்தில் திவ்யாவின் கணவராக ஆதர்ஷ் ரகுராம் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால் யார் இந்த ரகுராம் என்றே தெரியவில்லை என்கிறார் திவ்யா.
எனக்கு அந்தப் பெயரில் யாரையும் தெரியாது. அந்தப் பக்கத்தில் உள்ள இந்தத் தகவல்களை விக்கிபீடியா திருத்தும் என நம்புகிறேன் என்றார் சோகத்துடன். இந்தப் பேட்டியை கொடுத்து வாய் மூடுவதற்குள் விக்கிபீடியாவில் திருத்தி விட்டனர்-திவ்யா தத்துக்கு 'ஸ்பவுஸ்' யாரும் இல்லை என்று.
யாருப்பா, திவ்யாவுக்குத் தெரியாமலேயே அவருக்கு கல்யாணத்தைப் பண்ணி வச்சது...??


Click it and Unblock the Notifications











