நானாகத்தான் குறைச்சிக்கிட்டேன்-சந்தியா!

By Staff

Sandhya
சரியான கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பதற்காக படங்களைக் குறைத்துக் கொண்டேன் என்கிறார் காதல் நடிகை சந்தியா.

காதல், டிஷ்யூம் என வரிசையாகப் படங்கலில் நடித்த சந்தியாவுக்கு இது சரிவுகாலம். எந்தப் படமும் டிய மாதிரி தெரியவில்லை. உடனே அவர் கையிலெடுத்த உத்தி பிறமொழிக்குத் தாவுவது.

அது ஒரளவுக்கு நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியுள்ளது.

தற்போது கன்னடத்தில் நந்தா எனும் படத்திலும், இன்னும் பெயரிடப்படாத படங்கள் இரண்டிலும் நடித்து வருகிறார் சந்தியா.

தமிழில் ஓடிப்போலாமா என்ற படம் மட்டும்தான்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இரு படங்களிலுமே சுட்டித்தனமான கல்லூரி மாணவி வேடம் எனக்கு. நான் நடித்து சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'சைக்கிள்' மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழில் 'மஞ்சள் வெயில்' 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் வெளிவர வேண்டியதுதான் பாக்கி.

தமிழில் எனக்கு படங்கள் குறைந்து விட்டது என்பதில் உண்மையில்லை. அது யாரே கிளப்பிவிடும் புரளி. நல்ல கேரக்டர்களாக தேர்ந்தெடுத்து நடிப்பது என்று முடிவு செய்திருப்பதால் வரும் வாய்ப்புகளையெல்லாம் ஒப்புக் கொள்வதில்லை. அதேநேரம் பணம் மட்டுமே குறி என்று நான் செயல்படவில்லை. சம்பளம் குறைவு என்பதற்காக எந்த படத்தையும் நான் மறுக்கவில்லை, என்கிறார்.

நல்லா சொல்றாங்கய்யா டீட்டெய்லு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X