ஹீரோக்களை கட்டிப் புரண்டு போரடித்துவிட்டது! - சமீரா அலுப்பு

By Shankar

ஹீரோக்களைக் கட்டிப் பிடித்து டூயட் பாடி போரடித்துவிட்டது. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும், என்கிறார் சமீரா ரெட்டி.

வாரணம் ஆயிரம், அசல் போன்ற தமிழ் படங்களிலும், ஏராளமான தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலும் நடித்தவர் சமீரா ரெட்டி. சமீபத்தில் ரிலீசான கவுதம்மேனன் படமான நடுநிசி நாய்கள் படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஹைதராபாதில் நிருபர்களைச் சந்தித்தார் சமீரா.

நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், "கதாநாயகர்களுடன் டூயட் பாடி போரடித்து விட்டது. வருகிற எல்லா கதைகளுமே ஒரே மாதிரிதான் அமைகின்றன. ஹீரோக்களுடன் கட்டி புரளும் சீன்களில் எவ்வளவு நாள்தான் நடிப்பது, வேறு விதமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்.

குறிப்பாக லெஸ்பியன், விலைமாது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. இதுபோன்ற கதைகளுடன் என்னை அணுகினால் சம்பளத்தை குறைத்துக் கொள்வேன். விலைமாது, லெஸ்பியன் வேடங்கள் என்றால் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும். திறமையை வெளிப்படுத்தலாம்.

எனது கனவு பாத்திரங்களாக இவை உள்ளன. கதாநாயகிகளை டூயட் பாடவே பயன்படுத்துகின்றனர். அந்த நிலைமை மாற வேண்டும் அவர்களுக்குள்ளும் திறமைகள் இருக்கிறது. அதை வெளிப்படுத்துவது போன்ற கதைகளை உருவாக்க வேண்டும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X