முத்தமா... நோ நோ!- தமன்னா

கல்லூரி, படிக்காதவன் படங்களுக்குப் பிறகு தமிழின் நம்பர் ஒன் நாயகி என்றால் இப்போது தமன்னாதான்.
இவரது நடிப்பில் அடுத்த வரவிருக்கும் படம் அயன். சூர்யாவுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் அவர் நடிக்கிறார்.
தொடர்ந்து போதும்போதும் எனும் அளவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் வருவதாகவும், தேர்ந்தெடுத்து படங்களை ஒப்புக் கொள்வதாகவும் கூறுகிறார். அவர் கூறுகையில்,
தெலுங்கிலும் இப்போது பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். 13 வயதிலேயே மேக்கப் போட்ட நாயகி நானாகத்தான் இருப்பேன். இப்போது நான் மேஜர்தான்... ஆனாலும் சின்னப் பெண். முத்தக் காட்சி போன்ற கிளாமர் காட்சிகளுக்கு நோ சொல்லி விடுகிறேன்.
தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ள இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகினர். முத்தக் காட்சியிலும் நடிக்க வேண்டும் என்று கூறினர். நான் மறுத்துவிட்டேன். ஒரு போதும் அப்படி நடிக்க மாட்டேன்.
திரையுலகில் எல்லோரும் அன்பாகவே நடந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த பிறவி என்று இருந்தால் மீண்டும் தமன்னாவாகவே பிறக்க ஆசை.
தெலுங்கில் ஹேப்பி டேஸ் மெகா ஹிட் படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. மணிரத்னம் படத்தில் நடிக்க ஆர்வமாய் உள்ளது. அமிதாப்பச்சனும் சூர்யாவும் எனக்கு பிடித்த நடிகர்கள். எனக்குப் பிடித்த தமிழ்ப் படம் சந்திரமுகி, இந்தியில் ஷோலே.
எனக்கு எப்போதுமே ரசிகர்களுடன் உட்கார்ந்து படம் பார்ப்பது பிடிக்கும். இதுவரை அப்படித்தான் பார்த்து வந்திருக்கிறேன், கடைசியாக வந்த படிக்காதவன் உள்பட. அப்போதுதான் நடிப்பில் உள்ள குறைகளை தெரிந்து கொள்ள முடியும்.
காதல்...
காதலைப் பற்றி யோசிக்கிற வயசுதான் எனக்கும். காதலிப்பது தவறில்லை. ஆனால் எந்த விஷயத்திலும் நான் எல்லை தாண்டமாட்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications











