'கரெக்ட் பண்ண கமல்'! - புல்லரிக்கும் த்ரிஷா

By Staff

Trisha
என் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு நல்லா இருக்காது. அதை கமல்சார்தான் கரெக்ட் பண்ணார், என்கிறார் நடிகை த்ரிஷா.

கமலுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்திருக்கும் படம் மன்மதன் அம்பு.

உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படம் இது.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம், கமல்ஹாஸனுடனான அனுபவம் என போகிற இடமெல்லாம் மன்மத அம்பு குறித்து ஒரு செய்தியாவது சொல்லத் தவறுவதில்லை த்ரிஷா.

இந்தமுறை, கமல் எப்படி தனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார் என்பதை இப்படிக் கூறுகிறார் த்ரிஷா:

"கமல் சாருடன் நடிக்கணும்கிறது எனக்குப் பல வருஷக் கனவு. 'தசாவதாரம்' படத்தில் கமல் சார் நடிக்கக் கூப்பிட்டிருந்தார். அப்போ என் கையில் டேட்ஸ் இல்லை. அடுத்து 'மர்மயோகி' வாய்ப்பு. எக்கச்சக்க ஹோம் வொர்க் பண்ணி வச்சிருந்தேன். ஆனா என்ன காரணமோ, அந்தப் பட வேலைகள் நின்னுருச்சு.

'இதுக்கு மேல் அவரோட நடிக்க வாய்ப்பு வராது'ன்னு நினைச்ச நேரத்தில், 'மன்மதன் அம்பு' வந்தது. ஒரு விஷயத்தை இத்தனை விதங்களில் அணுக முடியுமாங்கிற பிரமிப்பை கமல் சார் தந்துட்டே இருக்கார். என் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு சரியா இருக்காது. என் உச்சரிப்பைத் திருத்தினார். இப்போ நான் அட்சர சுத்தமா தமிழ் பேச ஆரம்பிச்சுட்டேன். இதுக்கு காரணம் கமல்தான்..." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X