அண்ணன் அஜீத்தோடு ‘என் 108 நாட்கள்’...: வீரம் படம் குறித்து மனம் திறக்கும் விதார்த்

சென்னை: வீரம் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததன் மூலம் அஜீத்துடன் நடிக்கவேண்டும் என்ற தனது கனவு 2013ல் நிறைவேறி உள்ளதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் விதார்த்.

மைனா படம் மூலம் தனது முத்திரை நடிப்பை தமிழில் வெளிப்படுத்தினார் நடிகர் விதார்த். அதனைத் தொடர்ந்து தற்போது திரையரங்கங்களில் ஓடிக் கொண்டிருக்கும் ஜன்னல் ஓரம் படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பேசப்பட்டு வருகிறார்.

அடுத்தமாதம் ரிலீசாக உள்ள அஜீத்தின் வீரம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர். அஜீத் தனது உடன் பிறவா சகோதரன் எனத் தெரிவித்துள்ள விதார்த், அவர் மூலமாகவே தனக்கு வீரம் பட வாய்ப்பு அமைந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:-

கரும்பு தின்னக் கூலியா...?

கரும்பு தின்னக் கூலியா...?

அஜீத் சார் படத்துல் நடிக்கவிரும்புகிறீர்களா என்று டைரக்டர் சிவா சார் என்னை கூப்பிட்டார். கரும்பு தின்ன கூலியான்னு மறுநாளே போய் நின்றேன்.

அஜீத்தின் முயற்சி....

அஜீத்தின் முயற்சி....

ஆனால் அவர்கள் கேட்ட தேதி என்னிடம் இல்லை. அய்யோ... தல படத்துல நடிக்க முடியாமல் போயிடுமேன்னு கலங்கி நின்றேன். அப்போது அஜீத்சாரே நான் நடித்து வரும் படத்தின் டைரக்டர் மீரா கதிரவன்கிட்ட பேசி தேதி ஒதுக்கி கொடுக்கச் சொன்னார்.

பிரமாண்ட ஓபனிங் சீன்....

பிரமாண்ட ஓபனிங் சீன்....

பொதுவாக அஜீத் சார் நடிக்கிற படங்ககில் அவரோட ஓப்பனிங் காட்சி பிரம்மாண்டமாக இருக்கும். ஆனா "என்னோட ஓப்பனிங் சீன் முன்னாடி வளர்ற ஹீரோ விதார்த்துக்கு நிகரான ஓப்பனிங் சீன் வையுங்க"ன்னு அஜீத் சார் சொன்னார். அப்படியேதான் நடந்தது.

சுவிட்சர்லாந்து பயணம்...

சுவிட்சர்லாந்து பயணம்...

ஒரு நாள் போன்ல கூப்பிட்டார் "சுவிட்சர்லாந்து போயிருக்கீங்களா?" என்று கேட்டார்., இல்லைன்னு நான் சொன்னேன். "அப்ப கிளம்புங்க போகலாம்" என்றார் ஒரே நாளில் விசாவினை தயார் செய்து என்னை அழைத்துக்கொண்டு சென்றார்.

புல்லரிக்கும் நினைவுகள்....

புல்லரிக்கும் நினைவுகள்....

எனக்கு அங்கே ஷூட்டிங் கிடையாது. அவருக்குதான் ஷூட்டிங். ஆனாலும் என்னை அழைச்சிட்டு போய் ஊர் சுற்றி காட்டி, வேண்டியதை வாங்கித் கொடுத்தார். அந்த நாட்களை இப்போ நினைச்சாலும் புல்லரிக்குது.

போவோமா ஊர்கோலம்....

போவோமா ஊர்கோலம்....

ஒரு நாள் "பைக்லேயே டூர் போலாமா?"ன்னு கேட்டார் நீங்க எங்க கூப்பிட்டாலும் வருவேன் சார்னு போயி நின்னேன். விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிஸா வரைக்கும் அவரோட பைக் டூர். அவர் ஓட்டிக்கொண்டே செல்ல நான் பின்னால் உட்கார்ந்து போனேன்.

நான் பாக்கியசாலி....

நான் பாக்கியசாலி....

அந்த பாக்கியம் யாருக்கும் கிடைச்சிருக்காது. சாலையோர கடையில உட்கார்ந்து சாப்பிட்டு, பிளாட்பாரத்துல ரெஸ்ட் எடுத்து... என்ன ஒரு அனுபவம் அது.

அந்த 108 நாட்கள்....

அந்த 108 நாட்கள்....

சரியா 108 நாள் அவரோட இருந்திருக்கேன். அந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் என்னால மறக்கவே முடியாது.

என் அண்ணன்...

என் அண்ணன்...

இப்போது மட்டுமல்ல எப்போதும் அவர் எனக்கு கூடப்பிறக்காத அண்ணன் அஜித்' என இவ்வாறு நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் விதார்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X