Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கங்கனாவுக்கு லிப் டு லிப்? - மறுக்கும் மாதவன்
நடிகை கங்கனா ரனவத்துக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததாக வரும் செய்திகளில் உண்மையில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளார் மாதவன்.
3 இடியட்ஸ் வெற்றிக்குப் பிறகு இந்தியில் முக்கியமான நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ளார் மாதவன். இப்போது அவரும் கங்கனா ரனவத்தும் இணைந்து 'தனு வெட்ஸ் மனு' என்ற புதிய படத்தில் நடித்துள்ளனர்.
இதில் கங்கனாவும் மாதவனும் மிக நெருக்கமாக நடித்துள்ளனராம். சில காட்சிகளில் உதட்டோடு உதடு பதித்து முத்தமழை பொழிந்திருப்பதாக மும்பை பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
ஆனால் இந்தச் செய்தியை மறுத்துள்ளார் மாதவன். இதுகுறித்து அவர் கூறுகையில், "அதிர்ஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ எனக்கும் கங்கனாவுக்கும் அப்படி ஒரு காட்சி அந்தப் படத்தில் இல்லை. ஆனாலும் செய்தி வந்துவிட்டது. அதைப் படித்து ரசிப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு.
இப்போது இந்தப் படத்தின் விளம்பர சுற்றுப் பயணத்தில் இருக்கிறேன். படத்தில் நடிப்பது கூட ஈஸி. ஆனால் விளம்பர பணி இருக்கிறதே.. மகா கஷ்டம்", என்றார்.