'தப்பு செய்தேன்... பாடம் கத்துக்கிட்டேன்!'- இலியானா 'ஓபன்' பேட்டி
ஹைதராபாத்: சினிமாவில் ஆரம்பத்தில் எனக்கு சரியான வழிகாட்டி யாருமில்லை. அதனால் சில தவறுகள் செய்தேன். பாடங்கள் கற்றுக் கொண்டேன், என வெளிப்படையாக பேட்டி கொடுத்துள்ளார் நடிகை இலியானா.
தெலுங்கில் கொடிகெட்டிப் பறப்பவர் நடிகை இலியானா. கோடிகளை கொட்டிக் கொடுத்து அவரை தங்களது படத்தில் நடிக்க வைக்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆந்திராவில் அம்மணிக்கு அவ்வளவு பிஸி. அவர் தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார். தற்போது ஷங்கரின் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
தனது நடிப்பு அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "சினிமாத்துறைக்கு நான் வந்தபோது இங்கு எனக்கு யாரையும் தெரியாது. அதனால் வழிகாட்ட ஆளின்றி திணறினேன், சில தவறுகளையும் செய்தேன். அந்த தவறுகளில் இருந்து நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டேன்.
இப்போது பக்குவம் வந்துவி்ட்டது. என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதை கேட்டு அதில் என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறேன்.
பணம் சம்பாதிப்பது மட்டும் எனது குறிக்கோள் இல்லை. வருடத்திற்கு ஒரு படம் நடித்தால் கூட போதும். ஆனால் என் கதாபாத்திரம் பேசப்பட வேண்டும். வங்கிக் கணக்கை பார்த்தால் நல்ல நடிகை என்று பெயர் எடுக்க முடியாது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் வெளியாக வேண்டும் என்று நினைத்தால் நல்ல படங்களே அமையாது", என்றார்.


Click it and Unblock the Notifications











