ஷாயாலி பகத்தின் 'அப்ரோச்'!

By Staff

Sayali Bhagat with SJ Surya
சினிமாவிவல் வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று அழுகிற ரகமல்ல நான்... எந்த மொழியாக இருந்தாலும் வாய்ப்புகளை என்னாலும் பெற முடியும். அந்த டெக்னிக் தெரிந்திருக்க வேண்டும், என்கிறார் நியூட்டனின் மூன்றாம் விதியில் எஸ்ஜே சூர்யாவின நாயகியாக நடிக்கும் ஷாயாலி பகத்.

பாலிவுட்டியிருந்து தெலுங்குக்கு இறக்குமதியானவர் ஷாயாலி. அங்கு அல்லரி நரேஷூடன் ஒரு படம் பண்ணி பிரபலமானார். அந்த வேகத்தில் தமிழில் எஸ்ஜே சூர்யாவின் நியூட்டனின் மூன்றாம் விதியில் நடிக்கிறார்.

தொடர்ந்து மேலும் சில தமிழ், தெலுங்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ள ஷாயாலிக்கு, இந்திப் படவுலகிலிருந்தும் வாய்ப்புகள் வந்த வண்ணமுள்ளனவாம் (அம்மணி சொன்னதை அப்படியே ஒப்பிக்கிறோம்...!).

புது நடிகைகளுக்கு ஒரு மொழியில் வாய்ப்புக் கிடைப்பதே கஷ்டம். இவருக்கு மட்டும் எப்படி இத்தனை மொழிகளில் வாய்ப்பு?

இதற்கான விளக்கத்தை ஷாயாலி வாயாலேயே கேட்போம்:

இந்தி சினிமாவிலிருந்து வந்தாலும் எனக்கு தென்னிந்திய சினிமாதான் பிடித்திருக்கிறது. திறமைக்கு இங்கே நல்ல முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

நியூட்டனின் மூன்றாம் விதியில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக நடிக்கிறேன். சென்னையில் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. எஸ்.ஜே. சூர்யாதான் எனக்கு இப்போது நெருங்கிய நண்பர். சமீபத்தில் காய்ச்சலால் அவதிப்பட்டேன். சூர்யாதான் டாக்டரிடம் அழைத்துச் சென்றார். உடனிருந்து பார்த்துக் கொண்டார்!.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குடன் என்னை இணைத்துப் பேசுவது வருத்தமளிக்கிறது. அவர் எனக்கு நல்ல நண்பர் மட்டும்தான். ஒரு படத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கப்போகிறோம். அந்தப் படத்தை இயக்குபவரும் எனது நண்பர்தான். அதனால் அதில் நடிக்கிறேன்.

எனக்கு எப்படி தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கிறது என்று பலரும் கேட்கிறார்கள். அது எனது திறமை மற்றும் அதிர்ஷ்டம்தான். இத்துடன் நாம் நடந்து கொள்கிற விதம் மிக முக்கியம்.

தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகைகள் பலர், இந்தி சினிமாவில் வாய்ப்பு பெற விரும்புகிறார்கள். தென்னிந்திய சினிமாவில் தங்களுக்குரிய வருமானம் மற்றும் பாதுகாப்பு இல்லை என நினைக்கிறார்கள். அது தவறு. இங்குள்ள மாதிரி பாதுகாப்பு வேறு எங்கும் கிடையாது.

மேலும் இங்கு வாய்ப்பு கிடைக்க தாமதமானால் நடிகைகள் பயப்படக்கூடாது. இந்திய சினிமா மிகப் பெரிய தொழில். ஆண்டு தோறும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் வாய்ப்புகளும் அதிகரிக்கும். நாம் அணுகும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு அலுவலகத்தில் வேலைக்கு அணுகுவது போன்ற தொழில்முறை அப்ரோச் வேண்டும்... என்கிறார் ஷாயாலி.

அட, சினிமா வாய்ப்பு பெறுவது எப்படின்னு புத்தகமே எழுதலாம் போலிருக்கே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X