அமீரின் 'கிளிநொச்சி' என்ன ஆச்சு...?

அமீர் கதாநாயகனாக நடிக்கும் யோகி படம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ரூ.12 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் சென்னையின் குடிசைப் பகுதிகளைச் சுற்றி எடுக்கப்பட்டுள்ளது. பருத்தி வீரனை விட பவர்புல்லான படம் இது என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொல்கிறார் அமீர்.
இதற்கிடையே, ஈழத் தமிழர் வாழ்க்கைப் பற்றி அவர் எடுப்பதாக இருந்த கிளிநொச்சி திரைப்படம் கைவிடப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து அமீர் கூறுகையில்,
ஈழத் தமிழர்கள் வாழ்க்கை குறித்து ஒரு முழுமையான படம் எடுக்க திட்டமிட்டது உண்மைதான். ஆனால், இன்றைக்கு தமிழன் அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிறான். கிளிநொச்சி மட்டுமல்ல, அவனிடமிருந்த அனைத்தும் பறிபோய்விட்டன.
எனவே அந்தப் படத்தை எங்கு தொடங்கி எங்கே முடிப்பதென்றே தெரியவில்லை. அதனால்தான் இப்போதைக்கு அந்தப் படத்தை எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளேன், என்றார் அமீர்.
அடுத்ததாக அமீர் நடிக்கவில்லை.... மீண்டும் இயக்கத்துக்கே திரும்புகிறார். படத்தின் பெயர் கண்ணபிரான். நாயகன் ஜெயம் ரவி.


Click it and Unblock the Notifications











