ஐஸ்வர்யா ராய்க்கு நம்பிக்கை தந்த எந்திரன் வெற்றி!

உலக அழகியாக தேர்வு பெற்ற கையோடு ஐஸ்வர்யா ராய் நடிக்க வந்துவிட்டார். அவர் நடித்த முதல் படம் மணிரத்னத்தின் இருவர். ஆனால் அவர் முதலில் வெற்றியை ருசி பார்த்தது ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில்தான்.
அதன்பிறகு தமிழில் அவர் நிறைய படங்கள் நடிக்கவில்லை. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் என சில படங்களே நடித்தார். இந்தியில் படுபிஸியாக இருந்தவர் எந்திரனில் ரஜினிக்கு ஜோடியானார். இதுவரை அவரது திரைவாழ்க்கையில் அவர் காணாத வெற்றியை எந்திரன் தந்துள்ளது.
அந்த வெற்றி தந்த நம்பிக்கையில் ஐஸ்வர்யா இப்படிப் பேசுகிறார்:
"இருவர், ஜீன்ஸ் நடித்தபோது இல்லாத தன்னம்பிக்கையும் தைரியமும் எனக்கு இப்போது வந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு நிறைய முறை போயிருக்கிறேன். தங்கியிருக்கிறேன். அந்த மொழி எனக்கு நன்கு பரிச்சயமானது. பேசினால் புரிந்து கொள்வேன். ஏன்... ஓரளவு பேசவும் செய்வேன். ஆனால் தமிழ்மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதனால்தான் அதை பேசிக் கெடுக்காமல் இருந்தேன்.
இப்போது நன்கு கற்றுக் கொண்டுள்ளேன். என்னால் தெளிவாக, தடுமாற்றமின்றி படங்களில் தமிழைப் பிரயோகிக்க முடியும். அதனாலேயே நிறையப் படங்கள் செய்ய விரும்புகிறேன்.
எந்திரனில் நடித்தது பற்றிக் கூறும்போது, "இதுபோன்ற வேடங்களை அடிக்கடி செய்ய முடியாது. அதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படி எனக்கு அரிதாகக் கிடைத்த வேடத்தை சிறப்பாகச் செய்ய முடிந்தது. ஷங்கருக்கு நன்றி. முன்பைவிட இப்போது அவரை நன்கு புரிந்து கொண்டேன். அவர் நினைத்ததை என்னால் திரையில் தர முடிந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











