ரஜினிக்காக காத்திருப்பேன்-விஜயலட்சுமி!

By Staff

Vijaylakshmi
ரஜினி பக்கத்தில் நிற்பதே சந்தோஷம். அவருக்கு ஜோடியாக நடிக்க எத்தனை நாள் வேண்டுமானாலும் காத்திருப்பேன், என்கிறார் சுல்தான் - தி வாரியர் படத்தின் நாயகி விஜயலட்சுமி.

ரஜினியின் முதல் அனிமேஷன் படமான சுல்தானில், அவரது ஜோடியாக நடிப்பவர் விஜயலட்சுமி. இந்த படத்துக்காக அவர் அதிக நாள் நடித்து கொடுத்துள்ளார். இதனால் விஜயலட்சுமியின் மற்ற படங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:

ரஜினி ஒரு உலக சூப்பர் ஸ்டார். அதை நினைக்கும்போதே பெருமையாக உள்ளது. அவருடன் ஒரு காட்சியில் நடித்தாலும், உலகப் புகழ் கிடைத்துவிடும். அப்படிப்பட்டவருக்கு ஜோடியாக நடிப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

படத்துக்கு ஒப்பந்தம் செய்யும்போதே இந்தப் படத்துக்கு நிறைய நாட்கள் கால்ஷூட் வேண்டும், எப்போது படப்பிடிப்புக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்று சொல்லித்தான் ஒப்பந்தம் செய்தார்கள். எனக்கு அது ஒரு பொருட்டே அல்ல. ரஜினி சாருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். அந்த அளவு தீவிர ரசிகை நான். அதனால் அனைத்துக்கும் ஒப்புக் கொண்டே இதில் கையெழுத்திட்டேன்.

புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படும்போது, சுல்தானுக்குதான் முதலிடம் கொடுப்பேன் என அந்த தயாரிப்பாளர்களிடமே சொல்லி விடுகிறேன். அதனால் எந்த பிரச்னையும் இல்லை.

ரஜினி சார் இப்போது எந்திரனில் பிஸியாக இருக்கிறேன். இந்தியாவின் பெருமையை உலகுக்கு சொல்லப் போகும் படம் அது. எனவே அதை முடித்து விட்டு அவர் சுல்தானுக்கு வரும்வரை எத்தனை நாள் வேண்டுமானாலும் காத்திருப்பேன். அதுவே சந்தோஷம்தான் என்றார் விஜயலட்சுமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X