twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜபக்சேவை சந்திக்கவேயில்லை: கங்கை அமரன்

    By Siva
    |

    Gangai Amaran
    பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் தான் சொந்த விஷயமாகவே இலங்கை சென்றதாகவும், அங்கு அதிபர் ராஜபக்சேவை சந்திக்கவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    அன்மையில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இலங்கை சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்ததாகவும், அவரது மகனை இலங்கையில் உள்ள தமிழர்கள் சந்தோஷமாக வாழ்வதாக படம் எடுக்குமாறு அதிபர் சொன்னதாகவும், அந்த செலவை தாமே ஏற்றுக் கொள்வதாகவும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின.

    அந்த இசையமைப்பாளர் வேறு யாரும் இல்லை கங்கை அமரன் தான். அவரது மகன் வெங்கட் பிரபுவை வைத்து தான் படம் தயாரிக்கச் சொன்னதாக செய்திகள் வந்தன. இதை கங்கை அமரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது,

    நான் இலங்கை சென்றேன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அங்கு நான் அதிபர் ராஜபக்சேவை சந்திக்கவில்லை. நான் அங்கு நடந்த சித்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளத் தான் சென்றேன். அந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட சித்தர்கள் கலந்து கொண்டனர்.

    நான் சொந்த விஷயமாகவே சென்றேன். அப்படி இருக்கையில் நான் எப்படி ராஜபக்சேவை சந்திக்க முடியும். அப்படியே நான் சந்தித்திருந்தால் இந்நேரம் பத்திரிக்கைகளில் புகைப்படம் வந்திருக்காதா? இது அடிப்படையே இல்லாத வதந்தி. ராஜபக்சேவை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றார்.

    English summary
    Newspapers published a news that Gangai Amaran met Rajapakse in Sri Lanka. For this music director cum director told that he didn't meet Sri Lankan president Rajapakse when he went there. This is a baseless rumour and i went there personally to attend Sithars conferece, he added.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X