'17 வயசுலேயே ஆரம்பிச்சுட்டேன்...'

பாலிவுட்டின் அழகு நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. தனது நடிப்புலக அனுபவம், திரையுலக சவால்களை சமாளிக்கும் திறமை குறித்து அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.
திரையுலகம் சற்று முரட்டுத்தனமானது, கரடு முரடானது. இதை சமாளிக்க தனி தைரியம், திறமை நிச்சயம் வேண்டும். இங்கு ஏமாற்றுக்கார்கள் ஜாஸ்தி. அவர்களிடம் சிக்காமல் தப்புவதே ஒரு கலையாகும்.
ஆனால் இதெல்லாம் புதிதாக சினிமாவுக்கு வருபவர்களுக்குத்தான். நான் 17 வயதிலேயே நடிக்க வந்து விட்டேன். சினி்மாவின் சகலமும் எனக்குத் தெரியும். எதை எப்படி டீல் செய்ய வேண்டும் என்ற தந்திரம் எனக்குத் தெரியும்.
சினிமாவிலேயே வளர்ந்தேன், இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். 12வது படித்தபோது சினிமாவுக்கு வந்தேன். எனவே எனது வாழ்க்கையின் பெரும் பகுதி சினிமாவில்தான் கழிந்துள்ளது.
எனக்கு சினிமாவை விட்டால் வேறு எதுவுமே தெரியாது. இதை விட்டால் என்ன வேலை தெரியும் என்றால் நிச்சயம் என்னிடம் பதில் இல்லை என்கிறார் பிரியங்கா.
பெரிதாக பேசப்பட்ட வாட்ஸ் யுவர் ராசி படம் பெரும் பிளாப் ஆகி விட்டதே என்று கேட்டால், அது தலை விதி. யாரால் அதை மாற்ற முடியும். தொடர்ந்து நான்கு ஹிட் கொடுத்தேன். ஆனால் அடுத்து வந்த ராசி சரியாகப் போகவல்லை.
ஆனால் எனது நடிப்பையும், முயற்சியையும் நிறையப் பேர் பாராட்டினார்கள். இதுபோன்ற வித்தியாசமான படங்களில் நடிக்குமாறும் ஊக்கப்படுத்துகிறார்கள். இந்தப் படத்தில் நான் 12 ரோல்களில் நடித்ததை கின்னஸ் சாதனைக்காக அனுப்பியுள்ளனர். சாதனை என்று அங்கீகரிக்கப்பட்டால் சந்தோஷம்தான் என்கிறார் அழகாக சிரித்தபடி.


Click it and Unblock the Notifications











