கவசம்... முரளியின் 100 வது படம்!

கவசம் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
நந்திவரம் பா.சம்பத்குமார் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகம் சாய் ஹுரோவாகவும், லட்சனா, பிருந்தா ஆகிய இருவரும் ஹுரோயின்களாக நடித்துள்ளனர். இப்படத்தை எம்.எஸ்.மணிமாறன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சரவணனும், முரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இதுவரை 99 படங்கள் நடித்த முரளி, காவல்துறை அதிகாரியாக எந்தப் படத்திலும் நடித்ததில்லை.
அந்த குறையை போக்கும் விதத்தில் 'கவசம்' படத்தில் முறுக்கு மீசையுடன், மிடுக்கான தோற்றத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
கவசம் ஆடியோ வெளியீட்டு விழாவில் முரளி மகன் அதர்வா பங்கேற்று தந்தையின் நினைவுகளை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்.
Comments


Click it and Unblock the Notifications