ஷெரீன் இப்போது எழுத்தாளராக்கும்!

தமிழில் பிஸியாக இருந்த ஷெரீன், தனிப்பட்ட பிரச்சினைகளால் காணாமல் போனார். பின்னர் உற்சாகம் மூலம் மீண்டும் தமிழுக்குத் திரும்பினார்.
இப்போது பூவா தலையா, பிருந்தாவனம், வில், யோகி என கைவசம் ஏகப்பட்ட படங்கள் வைத்துள்ளார்.
கூடவே, கன்னடம், தெலுங்குப் படங்களிலும் நடிக்கிறார். கன்னடப் படம் ஒன்றுக்கு கதையும் எழுதுகிறாராம்.
அவர் கூறுகையில்,
தமிழில் இப்போது நான் நடித்துள்ள 'பூவா தலையா' ரிலீசாக இருக்கிறது. அடுத்தடுத்து படங்கள் வரவிருக்கின்றன.
கன்னடத்தில் நான் நடிக்கும் 'சிகிகாலி', 'யோகி', தெலுங்கில் 'ஒக்க உதயம் ஒக்க சாயங்காலம்' ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்தியில் நடிக்க நிறைய அழைப்பு வருகிறது. ஆனால், உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கச் சொல்கிறார்கள். ஒரேயடியாக எடை குறைந்தால், மற்ற மொழிகளில் நடிக்க இடைஞ்சலாக இருக்கிறது. அதனால்தான், இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறேன், எனும் ஷெரீன் படிப்பிலும் கவனம் செலுத்துகிறாராம்.
பி.ஏ ஆங்கில இலக்கியம் முடித்துள்ள ஷெரீன், ஓபன் யுனிவர்ஸிட்டியில் எம்.பில் தத்துவம் படிக்கப் போகிறாராம்.
கூடுதலாக இப்போது கன்னடப் படத்துக்கு கதை எழுதுவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம். படத்தின் பெயர், ஹீரோ, டைரக்டர் போன்ற விவரங்களை விரைவில் வெளியிடுவேன். அடுத்த இலக்கு டைரக்ஷன்தான் என்கிறார் ஷெரீன்.
ரொம்ப முன்னேற்றம்தான்!


Click it and Unblock the Notifications











