twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் திமுகவில் சேர முடிவெடுத்தால் யாரும் அதைத் தடுக்க முடியாது - வடிவேலு

    By Sudha
    |

    Vadivelu
    ராமநாதபுரம்: நான் திமுகவில் சேர முடிவெடுத்து விட்டால் யாரும் அதைத் தடுக்க முடியாது. அதேசமயம், நான் திமுகவில் சேர வேண்டும் என்று என்னை யாரும் வற்புறுத்தவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.

    சமீபத்தில்தான் நடிகை குஷ்பு திடீரென திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் நான் திமுகவில் சேர முடிவெடுத்து விட்டால் யாரும் அதைத் தடுக்க முடியாது என வடிவேலு கூறியிருப்பது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மாடக்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா, கடந்த 16ம் தேதி தொடங்கியது.

    கடைசி நாளான நேற்று மயில், ரதம், பால் காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், பெரியகருப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பங்கேற்றார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் தற்போது இல்லை. என்னை திமுகவில் இணையும்படி யாரும் வற்புறுத்தவும் இல்லை. மக்களுடன் மக்களாக இருந்து அனைவரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.

    திமுகவில் சேர வேண்டுமென முடிவெடுத்தால் அந்த முடிவில் இருந்து என்னை யாரும் தடுத்து விடமுடியாது என்றார் வடிவேலு.

    சிங்கமுத்து விவகாரத்தில் சிக்கி படாதபாடு பட்டு வருகிறார் வடிவேலு. கமிஷனரை நேரில் பார்த்தும், பல்வேறு புகார்கள் கொடுத்தும் சிங்கமுத்து கைது செய்யப்படாமலேயே இருந்து வந்தார். ஆனால் வடிவேலுவின் மேலாளர் சத்தம் போடாமல் திடீரென ஒரு புகார் கொடுத்த அடுத்த சில மணி நேரங்களில் சிங்கமுத்து கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவர் திமுகவில் சேருவாரா என்ற பேச்சு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X