கவர்ச்சி மட்டுமல்ல நடிப்பும் எனக்கு நன்றாகவே தெரியும்-சனா கான்
எனக்கு கிளாமர் மட்டும்தான் வரும், கவர்ச்சியாக மட்டுமே எனக்கு வரத் தெரியும் என்று கூறுபவர்களுக்கு ஆயிரம் விளக்கு சரியான பதிலடியாக அமையும் என்று கூறியுள்ளார் மும்பை அழகி சனா கான்.
சிலம்பாட்டம் மூலம் நடிக்க வந்த மும்பை மாடல் சனா கான் இப்போது முன்னணி நாயகி ரேஞ்சுக்கு உயரத் தொடங்கியுள்ளார். ஆயிரம் விளக்கு படத்தை தனது திரையுலக வாழ்க்கையில் முத்திரைப் படமாக அவர் வர்ணிக்கிறார்.
ஏன் அப்படி என்று கேட்டால், எனக்கு கவர்ச்சி மட்டும்தான் தெரியும், என்னால் கவர்ச்சி காட்டித்தான் நடிக்க முடியும், என்னை வெறும் கவர்ச்சி பொம்மை போலத்தான் காட்ட முடியும் என பலரும் கருதுகிறார்கள்.
ஆனால் இதற்கு முற்றிலும் நேர்மாறாக ஆயிரம் விளக்கு படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் நான் மதுரைக்காரியாக வருகிறேன். மதுரைக்காரப் பெண்கள் எப்படி இருப்பார்களோ அதை அப்படியே நான் இதில் பிரதிபலித்துள்ளேன்.
இந்தப் படத்தில் என்னைப் பார்க்கும்போது ஒரு மதுரைப் பெண்ணை பார்ப்பது போலவே இருக்கும். அப்படி தத்ரூபமாக நடித்துள்ளேன்.
எனக்கு கவர்ச்சி மட்டுமல்ல, இயற்கையான நடிப்பும் கூட சரளமாக வரும் என்பதை இந்தப் படம் நிரூபிக்கும் என்றார் சனா.
ஆத்தாடி, இப்பவே, மதுரைக்காரப் பொண்ணு போலவே பேசுறாரே சனா!


Click it and Unblock the Notifications











