தசாவதாரம் மைல் கல்-ஆசின்

தசாவதாரம் படம் திரையீட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தி கஜினியும் வேகமாக முடிந்து கொண்டிருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் படபடப்பும், பரபரப்பும் எகிறிக் கொண்டிருக்கிறது ஆசினிடம்.
அப்படி ஒரு விறுவிறுப்பான நேரத்தில் ஆசினைப் போனில் பிடித்து சில
வார்த்தைகள் பேசினோம். ஆசின் கொடுத்த பேட்டி ...
பாலிவுட் அனுபவம் எப்படி?
நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. நான் எதிர்பார்த்ததை விட இனிமையான அனுபவமாக இருக்கிறது. திரைப்பட உருவாக்கத்தின் புதிய பரிமாணத்தை அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.
கஜினி எந்த அளவில் இருக்கிறது?
2 நாட்களுக்கு முன்புதான் கஜினி படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்தது. இப்போது பரீட்சை முடிவுக்காக காத்திருக்கும் பிளஸ்டூ மாணவி போல நகத்தைக் கடித்துக் கொண்டு படபடப்பாக காத்திருக்கிறேன்.
தசாவதாரம் டிரெய்லர் பார்த்தீர்களா?
இன்னும் பார்க்கவில்லை. பார்க்க ஆவலாக இருக்கிறேன். தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நான் சென்னைக்கு வந்து சேருவேன். நேரம் கிடைத்தால் பத்திரிக்கையாளர்களை சந்திப்பேன். இந்தியத் திரையுலகில் இப்படம் பெரும் மைல் கல்லாக அமையும்.
உங்களது ரோல் பற்றி சொல்லுங்களேன்?
அது அற்புதமான அனுபவம். படம் முழுக்க நான் இரட்டை வேடங்களில் வருகிறேன். கமல்ஹாசன் போன்ற மாபெரும் நடிகருடன் இணைந்து பணியாற்றுவது என்பது மிகப் பெரிய அனுபவம். எனது திரைப்பட வாழ்க்கையிலும் இந்தப் படம் முக்கியமானதாக அமையும்.
தமிழில் அடுத்து என்ன படம் செய்கிறீர்கள்?
இப்போதைக்கு தென்னிந்திய மொழிப் படங்களுக்கு டேட்ஸ் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. தசாவதாரம் மற்றும் கஜினி ரிலீஸுக்காக காத்திருக்கிறேன். இன்னும் இரண்டு மாதங்களில் தமிழில் நடிப்பது குறித்து தீர்மானிக்கவுள்ளேன் என்றார் ஆசின்.


Click it and Unblock the Notifications











