சனா கானின் நடிப்புப் பயணம்

By Sudha

கவர்ச்சிகரமான நடிகையாக அறியப்பட்ட சனா கானை முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் காட்டியிருக்கிறார்கள் பயணம் படத்தில்.

பிரகாஷ் ராஜ், நாகார்ஜூனா நடித்துள்ள பயணம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சனா கான். விமானக் கடத்தல் கதையான இப்படத்தில் மேக்கப் இல்லாமல் இயல்பான தோற்றத்தில் நடித்துள்ளாராம் சனா கான்.

படத்தில் தனது கேரக்டர் சிறப்பாக வந்துள்ளதாகவும், தனக்கு இப்படம் நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என்று கூறுகிறார் சனா கான். தான் ரொம்ப காலமாக ரசித்து வந்த நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்தது பரம சந்தோஷம் என்று கூறும் சனா, படத்துக்குப் படம் வித்தியாசமாக நடிக்க ஆர்வமாக இருப்பதால்தான் ஒவ்வொரு படத்துக்கும் இடையே நிறைய இடைவெளி விழுவதாக செல்லமாக அலுத்துக் கொள்கிறார்.

படத்தின் இயக்குநர் ராதா மோகனும், நடிகர் பிரகாஷ் ராஜும் தனக்கு பல நல்ல டிப்ஸ்களைக் கொடுத்து கைட் செய்ததாக பெருமையுடன் கூறும் சனா கான், தான் கவர்ச்சியை விட்டு விடவில்லை என்றும், கதையுடன் கூடிய கவர்ச்சிக்கே முக்கியத்துவம் தருவதாகவும் கூறுகிறார்.

எனது படங்களில் முக்கிய இடம் இந்த பயணத்திற்கு உண்டு. இதில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. என்னையும் நடிக்க வைத்துள்ளனர் என்பதில் எனக்குப் பெருமையே என்கிறார் பயணம் தந்த களைப்பு முகத்தில் தெரியாமல் புன்னகைத்தபடி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X