ஹீரோதான் நம்ம லட்சியம்-'பசங்க' ஸ்ரீராம் அதிரடி!

By Sudha

Master Sriram
பெரிய ஹீரோவாயிடனும். இதுதான் எனது லட்சியம் என்கிறார் பசங்க படத்தில் ஜீவா என்ற கேரக்டரில் 'வில்லத்தனம்' செய்த மாஸ்டர் ஸ்ரீராம்.

ஒரு பக்கா 'ஆக்ஷன் ஃபிளிக்' பசங்க என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவுக்கு படத்தில் அன்பு, ஜீவாவாக வந்த இரு பொடிசுகளும் கலக்கியிருந்தனர் தங்களது அதிரடி நடிப்பில். இருவரும் தேசிய அளவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் தட்டிப் பறித்துள்ளனர்.

அதில் ஜீவாவாக வந்த குட்டிப் பையன் ஸ்ரீராமுக்கு மிகப் பெரிய ஹீரோவாக வந்து கலக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம்.

ஸ்ரீராமுக்கு முதல் படம் கற்றது தமிழ். ஆனால் பசங்கதான் தன்னை பெரிய லெவலுக்குக் கொண்டு போய் விட்டு விட்டதாக கூறுகிறார் புன்னகையுடன். இவரது தந்தை சினிமா மீது நிறைய ஆசை வைத்திருந்தவர். நடிக்கவும் செய்தார். ஆனால் அவரால் பெரிய அளவில் வர முடியவில்லையாம். அவரது ஆசையை நான் நிறைவேற்றுவேன் என்று கூறுகிறார் ஸ்ரீராம்.

இயக்குநர்கள் பாண்டிராஜ் மற்றும் சசிக்குமாருக்கு தான் நன்றிக் கடன் பட்டுள்ளதாகவும், மிகப் பெரிய ஹீரோவாகி தமிழ் சினிமாவைக் கலக்கப் போவதாகவும் நம்பிக்கையுடன் கூறுகிறார் ஸ்ரீராம்.

அதேசமயம், ஹீரோ ஆசையும் ஸ்ரீராம் மனசின் ஒரு ஓரத்தில் இருக்கிறதாம். இதனால் சினிமா குறித்த அனைத்து அடிப்படை விஷயங்களையும் கற்றுக் கொள்ளப் போகிறாராம்.

அப்ப அடுத்த கமல் ரெடி...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X