எனக்குத் தடையா... காமெடி பண்றாங்க! - 'குத்து' ரம்யா

By Shankar

Ramya
எனக்கு எதிராகத் தடையா... இவர்களை நினைச்சாலே சிரிப்பு சிரிப்பா வருது. காமெடி பண்றாங்க... என்னை யாரும் தடை செய்ய முடியாது. மீ்ண்டும் நடிக்கப் போகிறேன், என்கிறார் குத்து ரம்யா.

கன்னடப் படவுலகில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய நடிகையாக மாறியுள்ளார் குத்து ரம்யா. ஏற்கெனவே பத்திரிகையாளர் சந்திப்பில் இவர் தகராறு செய்ததாக புகார் கிளம்பியது. அப்போது கன்னட தயாரிப்பாளர் சங்கத்தால் எச்சரிக்கப்பட்டார் ரம்யா.

இப்போது மீண்டும் கணேஷ் என்ற தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால், கன்னட சினிமாவில் நடிக்க ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், தயாரிப்பாளர் கணேஷ் தனக்கு ரூ 9 லட்சம் கடன் தர வேண்டும் என்றும் அதைக் கொடுக்காமல் ஏமாற்றவே இப்படி தன் மீது வீண்பழி சுமத்துவதாகவும் கூறியிருந்தார் ரம்யா.

இப்போது நிலைமை ரம்யாவுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு பரவலாக எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. "இந்தத் தடை அவசியமற்றது. இதில் ரம்யா மீது தவறு ஏதுமில்லை. தடையை திரும்பப் பெற வேண்டும்" என்று கன்னட பிலிம்சேம்பரின் முக்கிய நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

பல தயாரிப்பாளர்கள் ரம்யா மீண்டும் நடிக்க வேண்டும் என்றும், அவரை வைத்து தாங்கள் படமெடுக்கத் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளனர். ரம்யாவின் ரசிகர்கள் பலர், இந்தத் தடைக்கு எதிராக பெங்களூரில் போராட்டமும் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தன்மீதான தடை குறித்து அவர் அளித்துள்ள பேட்டி:

"என் மீது விதிக்கப்பட்ட தடை எந்த அளவுக்கு நியாயமற்றது என அனைவரும் அறிந்துள்ளனர். இது ஒரு காமெடி அறிவிப்பு. சிரிக்காமல் இருக்க முடியவில்லை. உண்மையில் நானே இந்த துறையிலிருந்து விலக நினைத்திருந்தேன். ஆனால், இந்தத் தடை அறிவிப்பு என் முடிவை மாற்றிவிட்டது. அடுத்த படத்துக்கு உடனே கால்ஷீட் தரப் போகிறேன். மீறி என்னைத் தடுத்தால், கோர்ட்டுக்கும் போவேன்", என்றார்.

இதைத் தொடர்ந்து பிரபல கன்னட தயாரிப்பாளர் முனிரத்னா தனது அடுத்த படத்தில் நடிக்குமாறு ரம்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X