twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியின் 'சுல்தான்' வெளிவர தாமதம் ஏன்?

    |

    Soundarya
    ரஜினி நடிக்கும் அனிமேஷன் படமான 'சுல்தான்- தி வாரியர்' 2010ம் ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்தப் படம், 70 சதவீத அளவுதான் முடிந்திருக்கிறது.

    ரஜினி- விஜயலட்சுமி ஜோடியாக நடிக்க, ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் எப்போது வெளிவரும் என்று ரஜினி ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. காரணம் வரும் 2010ம் ஆண்டு எந்திரன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்தப் படத்துக்கு முன்பு சுல்தான் வருமா அல்லது பின்னர் வருமா என்று கேட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து சமீபத்தில் சௌந்தர்யா அளித்துள்ள பேட்டியில்,

    ரஜினியை வைத்து நான் கார்ட்டூன் படம் எடுக்கவில்லை. இது முற்றிலும் வித்தியாசமான அனிமேஷன் படம். சர்வதேச தரத்தில் தயாராகும் இந்த 3 டி படத்தை சீக்கிரத்தில் எடுத்துவிட முடியாது. வெளி நாடுகளில் கூட இது போன்ற படத்தை எடுக்க ஏழு வருடங்கள் வரைகூட ஆகும்.

    பல விஷயங்களை ஆராய்ச்சி செய்து, மிகப் பிரமாண்டமாக அதே நேரம் ரசிகர்களுக்குப் பிடித்தமான விதத்தில் எடுத்து வருகிறோம். என்னைப் பொருத்தவரை இது ஒரு தமாமதமே அல்ல… மிக சராசரியான கால அளவுதான். சில தினங்களுக்கு முன் சொன்னதைப் போல, இப்போதைக்கு 70 சதவீகித பணிகள் முடிந்துள்ளன.

    இந்தத் தேதியில்தான் ரிலீசாகிறது என என்னால் இப்போது சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயம் 2010 மத்தியில் வெளியாகிவிடும். இது உறுதி...என்று கூறியுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X