twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்களை இழிவுபடுத்தவில்லை – தனுஷ் விளக்கம்

    By Shankar
    |

    சென்னை: சமீப காலமாக பரபரப்பாகப் பேசப்படும் தனுஷின் ஒய் திஸ் கொலவெறி டி பாடல் பெண்களுக்கு எதிரானது அல்ல என்று நடிகர் தனுஷ் விளக்கமளித்துள்ளார்.

    சமீபத்திய சினிமா படங்கள் பலவற்றில் பெண்களை இழிவுபடுத்தி பாடல்கள் எழுதப்படுவதாக மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சிம்பு பாடிய “எவண்டி உன்ன பெத்தான் கையில கிடைச்சா செத்தான்" என்ற பாடலும் 'லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே…" பாடலும் பெண்களுக்கு எதிரானவை என்று கண்டிக்கப்பட்டன.

    அந்த வரிசையில் தனுஷ் பெண்களை இழிவுபடுத்தி 3 என்ற படத்தில் ஒய் திஸ் கொலை வெறிடி பாடலை எழுதி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பாடல் வெளியான 5 நாட்களில் இண்டர்நெட்டில் 20 லட்சம் பேர் இந்தப் பாடலைக் கேட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து தனுஷிடம் கேட்டபோது, “எனது மனைவி ஐஸ்வர்யா 3 படத்தை இயக்குகிறார். பாடலுக்கான சூழ்நிலையை அவர் விளக்கியதும் இந்த பாட்டை எழுதினேன். படத்தில் இடம் பெறும் ஒரு பெண் கேரக்டரை பற்றிய பாடல் அது. ஒட்டு மொத்த பெண்களையும் இழிவுபடுத்தி அந்த பாடலை எழுதவில்லை. ஒரு பெண்ணை மட்டும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன். 'கேர்ள்" என்று ஒருமையில்தான் எழுதினேன். 'கேர்ள்ஸ்" என்று எல்லா பெண்களையும் குறிப்பிடவில்லை" என்றார்.

    English summary
    Actor Danush denied the criticism that he has portrayed females badly in his recently released ‘Why this kola very di’ single track.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X