பாலிவுட் ஆசையில்லை!-த்ரிஷா

By Staff

Trisha
இந்தியில் நடித்துதான் என்னை ஒரு நல்ல நடிகை என நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார் த்ரிஷா.

தமிழில் அவர் நடித்துள்ள அபியும் நானும் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. படம் குறித்த 'டாக்' சிறப்பாக உள்ளதால், மிகுந்த சந்தோஷத்தில் உள்ள த்ரிஷா, சமீபத்தில் கூறியதாவது:

இப்போது தமிழ், தெலுங்கில் நிற்கக் கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன். இதில் மற்ற மொழிப் படங்களைப் பற்றி நான் யோசிப்பதுகூட இல்லை.

அபியும் நானும் படத்தில் நடிக்கும்போதே அது ஒரு மிகப்பெரிய ஹிட் படம் என்று புரிந்து கொண்டேன். இப்போது படம் பார்த்த எல்லாருமே மிகவும் பாராட்டுகிறார்கள்.

தமிழில் அடுத்து ரமேஷ்பாபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறேன். இதில் விஷாலுக்கு ஜோடி. தெலுங்கில் வெங்கடேஷுடன் உடன் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.

இரு மொழிகளிலும் பிசியாக இருப்பதால் வேறு மொழிகளில் நடிக்க நேரமில்லை. எல்லோரும் இந்தி படங்களில் நடிக்கிறார்கள். நீங்கள் ஏன் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள்.

இந்தி படத்தில் நடித்துதான் ஆக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் எனக்கில்லை. அப்படி நடித்துதான் என் திறமையை நிரூபிக்க வேண்டுமா என்ன?

எனக்கும் நிறைய இந்தி கதைகள் சொன்னார்கள். எதுவும் சரியாக அமையவில்லை.

இந்தியில் நடிப்பதாக இருந்தால் பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ, நல்ல கதை மூன்றும் இணைந்து அமைய வேண்டும். அப்படி இணைந்து வரும்போது பார்க்கலாம்.

நாகர்ஜுனாவுடன் நடித்துள்ள கிங் அடுத்த மாதம் வெளிவருகிறது. அதன் பாடல் வெளியீட்டு விழாவில் நாகேஸ்வரராவ் என்னை புகழ்ந்து பேசினார். அதைத்தான் நான் பெரிய விருதாக நினைக்கிறேன், என்றார் த்ரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X