வாரிசு நடிகர்கள் மீது விமர்சனம்... கார்த்திக்கு வந்த ஆத்திரம்!

By Sudha

நடிகரின் மகனாக இருப்பதால் சீக்கிரம் சினிமாவில் ஜெயிக்க முடிந்தது என்ற விமர்சனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் நடிகர் கார்த்தி.

நடிகர் கார்த்தி நேற்று கோவை வந்தார். அவர் நடித்த படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு சென்று ரசிகர்கள் முன் பேசினார்.

"சிறுத்தை எனக்கு 5-வது படம். நான் நடித்த அனைத்து படமும் வெற்றி பெற்றுள்ளது...", என்று மிதப்புடன் ஆரம்பித்தார்.

உடனே ரசிகர் ஒருவர், "உங்கள் படங்களில் பிரமாதமான வெற்றி என்றால் பருத்தி வீரன் ஒன்றுதான். மற்றவற்றை அப்படி சொல்ல முடியாதே?" என்றார்.

உடனே, இல்லையில்லை, எனது எல்லா படங்களும் வசூலில் பெரும் வெற்றி பெற்றன என்றார்.

அடுத்த ரசிகர், சிவகுமார் மகன் என்பதால் சீக்கிரம் பிரபலமாகிவிட்டீர்கள், என்றார்.

உடனே கார்த்தி, "சினிமாவிலும் வாரிசுகளே வருவதாக இங்குள்ளவர்கள் விமர்சிக்கின்றனர். நான் உதவி இயக்குனராக பணியாற்றித்தான் நடிகராகி உள்ளேன். வாரிசு என்பதை விட கஷ்டப்பட்டு நடித்தால்தான் நிலைக்க முடியும். மக்கள் ஏற்றுக்கொள்ளவார்கள். வாரிசு நடிகர் என்பதால் இஷ்டத்துக்கும் விமர்சிக்ககத் கூடாது" என்றார் ஆத்திரத்துடன்.

சினிமாவில் என் அண்ணன்தான் எனக்கு குரு, ரோல்மாடல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X