ரஜினி சொன்னா மறுபேச்சு கிடையாது! - சோனு
இனி வில்லனாக நடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது படத்தில் வில்லனாக நடிக்கக் கேட்டார். மறுக்க முடியவில்லை. ரஜினி சொல்லுக்கு மறுபேச்சு உண்டா?" என்கிறார் பிரபல நடிகர் சோனு சூட்.
சந்திரமுகியில் ரஜினியுடன் ஆக்ரோஷமாக மோதும் வேலைக்காரன் வேடத்தில் வந்தவர் சோனு.
இந்தியில் இன்றைக்கு பிஸியான நடிகர். தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க அளவு படங்களுடன் பரபரப்பாக நடித்து வருகிறார்.
சல்மானின் தபாங் படத்தில் இவர்தான் வில்லன். இப்போது வில்லன் வேடத்திலிருந்து ஹீரோவுக்கு புரமோட் ஆகி வரும் சூழலில், ரஜினியின் ராணா படத்தில் இவருக்கு முக்கிய வில்லன் வாய்ப்பு வந்துள்ளது. ஏற்பதா மறுப்பதா என்ற தயக்கம் ஆரம்பத்திலிருந்ததாம்.
"ஆனால் எனக்கு ரஜினி சார் மிக முக்கியம். அவர் ஒரு சகாப்தம். சண்டைக்காட்சிகளில் அவரிடம் அடி வாங்குவதே பெருமைதான். ராணாவில் நடிப்பதா வேண்டாமா என்ற யோசனையே எனக்கில்லை. காரணம், ரஜினி பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது!", என்கிறார் சோனு.
ராணாவில் இன்னொரு வில்லனும் உண்டு. ஆனால் அது ஆண் அல்ல... பெண். இந்த வேடத்தை பிரபல பாலிவுட் நடிகை ரேகா ஏற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











