விவாகரத்துக்குப் பிறகுதான் நிறைய வாய்ப்பு வருது! - சோனியா அகர்வால்

By Shankar

செல்வராகவனை விவாகரத்து செய்துவிட்ட பிறகு ஏராளமான வாய்ப்புகள் வருவதாக நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.

சமீபத்தில் சோனியா அகர்வால் அளித்துள்ள பேட்டியில், அவர் இப்போது நடிக்கும் படங்கள் குறித்து கூறியுள்ளார். அவர் கூறுகையில், "விவாகரத்துக்கு பின் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்கிறேன்.

சினிமாவில் நல்ல இடத்தைப் பிடிக்க வேண்டும் அதற்காக பொறுமையாகவும் கவனமாகவும் படங்களைத் தேர்ந்தெடுக்கிறேன்.

வானம் படத்துக்குப் பிறகு இரண்டு புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். நல்ல கதை. பெரிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. கவர்ச்சியை பொருட்டாக நினைக்கவில்லை. கதாநாயகியை முதன்மைபடுத்தும் படமாக இருந்தால் உடனே ஒப்புக் கொள்கிறேன்.

எல்லா கேரக்டர்களிலும் நடித்து பெயர் வாங்க வேண்டும். தெலுங்கிலும் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். கதாநாயகி என்றில்லாமல், கதையில் முக்கியத்துவம் உள்ள நாயகியாகவும் நடிக்க தயாராகிவிட்டேன்," என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X