முட்டாள்தனமான படங்களே ஆஸ்கருக்குப் போகின்றன! - ப்ரியதர்ஷன்

ப்ரியதர்ஷன் இயக்கிய காஞ்சீவரம் படம் சர்வதேச விருதுகளையும், இந்திய அரசின் விருதுகளையும் வென்றுள்ளது. இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்கு இந்தப் படம் ஏன் அனுப்பப்படவில்லை? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:
"என் படம் உள்ளிட்ட இந்திய படங்கள் ஏன் ஆஸ்கர் விருது வாங்குவதில்லை என சிலர் கேட்கின்றனர். ஆஸ்கர் விருது பெறும் தகுதி இந்திய படங்களுக்கு உண்டு. ஆனால் இங்கிருந்து படங்களை தேர்வு செய்து அனுப்புவோர், தரமற்ற, முட்டாள்தனமான படங்களைத்தான் அனுப்புகிறார்கள்.
ஆஸ்கருக்கான இந்திய திரைப்பட நடுவர் குழு சரியில்லை. அடூர் கோபாலகிருஷணன் 7 முறை தேசிய விருது பெற்றுள்ளார். அவரது படங்கள் ஒன்றையாவது ஆஸ்கருக்கு அனுப்பி இருப்பார்களா?. சத்யஜித் ரே படங்களையே அனுப்பாமல் இருட்டில் வைத்தவர்கள்தானே இந்தியத் தேர்வாளர்கள்!.
ஏக் லவ் யா என்ற இந்தி படத்தை ஆஸ்கருக்கு அனுப்பினார்கள். அது ஆஸ்கருக்காக தயாரான படமா? அது வியாபாரத்துக்காக தயாரான படம். அது கூட இங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. சிபாரிசுகளின்படி படங்களை பார்த்து அனுப்புகிறார்கள்.
இது விருதுகளைத் தராது, தலைக் குனிவைத்தான் தரும். இந்தியா முழுவதும் தயாராகும் நல்ல படங்களை தேர்வாளர்கள் தேடிப்போய் பார்க்க வேண்டும். அதுதான் அவர்கள் வேலை.
காஞ்சீவரம் திரைப்படத்தை டொரண்டோ திரைப்பட விழாவில் 1.000 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் பார்த்தனர். காட்சி முடிந்ததும் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர். ஆனால் அந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











