மோசர்பேர் மீது நவ்யா புகார்!

சேரன் நாயகனாக நடிக்கும் ராமன் தேடிய சீதை படத்தில் ஐந்து கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் நவ்யா நாயர். தங்கள் அடுத்த படத்தில நாயகியாக ஒப்பந்தம் செய்ததால் இதில் இலவசமாக நடித்துக் கொடுத்தாராம் நவ்யா.
இது குறித்து நவ்யா நாயர் கூறியுள்ளதாவது:
மோசர் பேயர் நிறுவனம் 'அவள் யெர் தமிழரசி' படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தது. ஆகவே இந் நிறுவனம் தயாரித்த ராமன் தேடிய சீதை படத்தில் நான் சம்பளமே இல்லாமல் கவுரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தேன்.
இந்நிலையில் 'அவள் பெயர் தமிழரசி' படத்துக்கு நான் கொடுத்த கால்ஷீட்டை அவரகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. விளைவு, நான் அப்படத்திலிருந்து விலகிக் கொண்டேன். ஆனால் என்னை நீக்கி விட்டதாக்க் கூறிக் கொள்கிறார்கள்.
அவள் பெயர் தமிழரசியில் நான் இல்லாத நிலையில், நியாயப்படி பார்த்தால் 'ராமன் தேடிய சீதை' படத்தில் நடித்ததற்கு அவர்களாகவே எனக்கு எனக்கு சம்பளம் தந்திருக்க வேண்டும். ஆனால் தரவில்லை. நம்பிக்கை துரோகம் செய்த்து மோர் பேர்தான்.
அண்மையில் நடந்த 'ராமன் தேடிய சீதை' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்குக் கூட அதனால்தான் நான் வரவில்லை என்கிறார் நவ்யா.


Click it and Unblock the Notifications











