நான் தப்பு பண்றது இல்ல!-ஜீவா

By Staff

எங்கப்பா பெயரை கெடுக்காம இருக்கவே கட்டுப்பாடா இருக்கேன்!-ஜீவா

'தமிழ் சினிமாவில் எங்கப்பா ஆர்.பி. சௌத்ரி 25 வருஷமா சேர்த்து வைத்திருக்கும் நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவே நான் ஒழுக்காம இருக்கேன்' என்கிறார் நடிகர் ஜீவா.

கற்றது தமிழ், ராமேஸ்வரம் போன்ற படம் சரியாகப் போகாததால் சின்ன தடுமாற்றத்துக்கு உள்ளான ஜீவாவுக்கு, அவர் சமீபத்தில் நடித்து வெளியான தெனாவட்டு, சிவா மனசுல சக்தி போன்ற படங்கள் நல்ல வெற்றியைத் தந்தன. இதனால் மீண்டும் முதல் நிலை நடிகர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளார் ஜீவா.

அவர் கூறுகையில்,

தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்கள் கொடுத்தது சந்தோஷமாக உள்ளது. எனக்கான பாத்திரங்கள் எப்படி இருந்தால் ரசிகர்களுக்குப் பிடிக்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன். இனி நான் கலகலப்பான வேடங்களில் மட்டுமே நடிப்பேன். அப்படிப் பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

என்னைப் பற்றி எந்த கிசிகிசுவும் வாராமலிருக்கக் காரணம், என் தந்தை பெயரைக் கெடுக்கக்கூடாது என நான் நல்ல பையனாக நடந்து கொள்வதுதான்.

அவர் இந்த சினிமாவில் 25 வருடங்களாக ஒரு சாதனையாளராக திகழ்பவர். இத்தனை ஆண்டுகள் அவர் காப்பாற்றி வைத்ததைக் கெடுக்கக் கூடாது என்ற எண்ணமே என்னை தவறுகளில் சிக்க வைக்காமல் இருக்கிறது", என்றார் ஜீவா.

இப்போது கச்சேரி படத்தில் நடிக்கும் அவர் மேலும் இரு புதுப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படங்கள் அனைத்துமே பெரிய பட்ஜெட்டில் உருவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X