திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள்!-த்ரிஷா

By Staff

Trisha
'கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானியுடன் கைகலப்பில் ஈடுபடவில்லை. நாங்கள் அமைதியாக சாப்பிட்டு விட்டு வந்துவிட்டோம். பதானி யார் என்றே எனக்குத் தெரியாது,' என நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இரவு மதுவிருந்து நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற த்ரிஷா மற்றும் கிரிக்கெட் வீரர் பதானிக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டதாகவும் பின்னர் அது கைகலப்பில் முடிந்ததாகவும் செய்திகள் பரவின. அனைத்து நாளிதழ்களிலும் இதுபற்றி பெரிய அளவில் செய்திகள் வெளியாகின.

இருவரும் மது போதையுடன் டான்ஸ் ஆடியபோது பதானி, திரிஷா மீது தெரியாமல் மோதி விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த திரிஷா, பதானியை திட்டியதாக தெரிகிறது.

பதிலுக்கு பதானியும் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே அடிதடி மூண்டுள்ளது. இருவரின் நண்பர்களும், இருவரையும் விலக்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, செய்திகளை வெளியிட்ட அதே பத்திரிகைகளுக்கு த்ரிஷா தனிப்பட்ட முறையில் பேட்டியளித்து வருகிறார்.

அதில் தனக்கு பதானி என்ற கிரிக்கெட் வீரரையே தெரியாது என்றும், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் நாள் இரவு, அந்த ஓட்டலில் தோழிகளுடன் அமைதியாக டின்னர் சாப்பிட்டு வந்துவிட்டேன் என்று அவர் கூறியுள்ளார். தன்னைப் பற்றி திட்டமிட்டு இதுபோன்ற செய்திகள் வருவதாகவும், இப்படி செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறினார்.

திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் கூறுகையில், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அந்த கிளப்புக்கு திரிஷா சமீப காலமாக போகவே இல்லை. மேலும், அவர் இதுவரை பார்த்திராத நபருடன் ஏன் சண்டை போட வேண்டும் என்றார்.

பதானி தரப்பில் இதுவரை இந்த செய்தியை மறுக்கவும் இல்லை, நடந்தது என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X