எனக்கு கல்யாணமா? - பதறும் 'கவர்ச்சி' கிரண்

By Shankar

கதாநாயகியாக அறிமுகமாகி கவர்ச்சி நாயகியாகிப் போன கிரண், தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார்.

ஜெமினி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் கிரண். வில்லன், அன்பேசிவம், வின்னர், தென்னவன், நியூ, சுந்தர் சி நடித்த குரு சிஷ்யன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அகராதி என்ற படத்தில் நடித்து வருகிறார். இடையில் சில கவர்ச்சிப் படங்களிலும் தலைகாட்டினார்.

இந்த நிலையில் கிரணுக்கு திருமணம் முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. நெருக்கமான நண்பர் ஒருவரை அவர் மணந்து கொண்டதாக கூறப்பட்டது.

இதனை மறுத்துள்ளார் கிரண். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:

கடந்த சில தினங்களாக எனது நண்பர்கள் சிலர் போன் செய்து திடீரென என் மேல் கோபப்பட்டனர். திருமணத்துக்கு எங்களை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டார்கள். இன்னும் சிலர் எனக்கு திருமண வாழ்த்துக்கள் கூறினார்கள். அதன் பிறகுதான் நான் திருமணம் செய்து கொண்டதாக செய்தி வந்திருப்பது எனக்கு தெரிய வந்தது.

இந்த செய்தியை பார்த்து சில தயாரிப்பாளர்கள் என்னை படங்களில் ஒப்பந்தம் செய்ய மறுத்தனர். சிலர் அட்வான்ஸ் பணத்தைக் கூட திருப்பி வாங்கிக் கொண்டனர். திருமணமான உன்னால் நடிப்பில் கவனம் செலுத்த முடியாது என்றனர். இதனால் பாதிப்புக்கு உள்ளானேன். எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை.

கடந்த 7 வருடங்களில் எனக்கு திருமணம் முடிந்து விட்டதாக மூன்று தடவை செய்திகள் வந்துள்ளன. நான் தனியாகத்தான் இருக்கிறேன். எனது கவனமெல்லாம் சினிமாவில்தான் இருக்கிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்கிறேன்," என்றார்.

அதுக்கென்ன நம்பிட்டா போச்சு!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X