பிரியங்காவின் 'லெஸ்பியன்' ஆசை!

பாலிவுட்டின் பியூட்டிஃபுல் புயல்களில் பிரியங்காவும் ஒருவர். சமீப காலமாக வித்தியாசமான கதை தேடலில் தீவிரமாகி விட்டார்.
தான் நடிக்கும் ஒவ்வொரு படமும் பேசப்பட வேண்டும், விமர்சிக்கப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் துணிச்சலாகவும் சில கருத்துக்களை கூறத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில், ஹோமோ செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். அவர்களுக்கும் மற்றவர்களைப் போல சம உரிமை, மரியாதை அளிக்க வேண்டும் என்றார் பிரியங்கா.
அப்படியானால் நீங்கள் லெஸ்பியன் கேரக்டரில் நடிப்பீர்களா என்று கேட்டால், ஏன் நடிக்க முடியாது. கண்டிப்பாக நடிப்பேன். அப்படி ஒரு கதையும், கேரக்டருக்குத் தேவை என்று தெரிந்தால் நிச்சயம் நடிப்பேன். அதில் என்ன தவறு என்கிறார் பிரியங்கா.
அவர் கூறுவதைப் பார்த்தால் அடுத்த அப்படிப்பட்ட படத்தில் நடித்தாலும் நடிக்கலாம் எனத் தெரிகிறது.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தோஸ்தானா, பேஷன் ஆகிய இரு படங்களும் ஹோமோசெக்ஸ் குறித்த கதைதான் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











