மலையாளத்தில் நடிக்கிறேனா?-மறுக்கும் தமன்னா

தமிழில் முன்னணி நடிகையாக உள்ள தமன்னா, அடுத்து மலையாளப் படவுலகிலும் கால் பதிப்பதாகவும், மோகன்லாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வந்தன.
இந்தச் செய்திகள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள தமன்னா, "தமிழ், தெலுங்குப் படங்களில் மட்டுமே நான் இப்போது நடிக்கிறேன். தமிழில் தொடர்ந்து எனக்கு படங்கள் உள்ளன. எனது அடுத்த படம் தில்லாலங்கிடி விரைவில் வெளியாக உள்ளது. அடுத்து கார்த்தி மற்றும் தனுஷுடன் நடிக்கிறேன். தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் அல்லு அரவிந்துடன் ஒரு படம் என படு பிஸியாக உள்ளேன். இதில் மலையாளப் படங்களில் நடிப்பது குறித்து நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை" என்றார்.
கமலுடன் நடிப்பதாக வந்த செய்திகளிலும் எந்த உண்மையும் இல்லை என்றார் அவர்.
Comments


Click it and Unblock the Notifications