பரிவான திரிஷா!

திறமையான நடிகையாக மட்டும் இல்லாமல், மனிதாபிமானம் மிக்க பெண்ணாகவும் இருக்கிறார் திரிஷா. தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களை மதித்து, அவர்களுக்குரிய வசதிகள் கிடைக்கச் செய்வதில் திரிஷாவுக்கு நிகர் திரிஷாதான் என்கிறார்கள்.
ஷூட்டிங்கின்போது தனக்குக் கிடைக்கும் நல்ல வசதிகளைப் போலவே தனது பணியாளர்களுக்கும் கிடைக்கிறதா என்பதில் மிகவும் கவனமாக இருப்பாராம் திரிஷா. தன்னுடைய மேக்கப்மேன், ஹேர் டிரஸ்ஸர், காஸ்ட்யூமர், ஹெல்ப்பர் என அனைவரையும், சமமாக மதித்து ஒரே மாதிரியான பரிவைக் காட்டும் ஒரே நடிகை திரிஷாவாகத்தான் இருக்க முடியும்.
இதுகுறித்து திரிஷா கூறுகையில், தொழில் ரீதியாக யாரையும் வேறுபடுத்தி நான் பார்ப்பதில்லை. அனைவரையும் சமமாகவே மதிப்பேன். இந்த உலகில் பிறந்த அனைவருமே சமம்தான். அனைவருக்கும் சம உரிமைகள் உண்டு.
எந்தப் படத்தில் நான் ஒப்பந்தம் செய்து கொண்டாலும், என்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு, உரிய வசதிகள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வேன்.
நல்ல சாப்பாடு, வசதியான போக்குவரத்து, குளிர்சாதன வசதியுடன் கூடிய தங்குமிடம் ஆகியவை கிடைப்பதில் நான் உறுதியாக இருப்பேன். அவர்கள் எந்த காரில் பயணிக்கிறார்கள் என்பதிலும் கூட நான் அக்கறையாக இருப்பேன் என்கிறார்.
திரிஷாவின் இந்த மனிதாபிமான, சமத்துவ, சோசலிச போக்கால் அவரிடம் பணியாற்றும் அனைவருமே படு சந்தோஷமாக, ஜாலியாக இருக்கிறார்களாம். இதற்கு முன்பு பலரிடம் வேலை செய்துள்ளோம். ஆனால் இப்படி எங்களை யாருமே மதித்ததில்லை, எங்களுக்காக குரல் கொடுத்ததில்லை என்கிறார்கள் உணர்ச்சிவசப்பட்டு.
நீங்க நல்லா இருக்கோணும்!


Click it and Unblock the Notifications











