இயக்குநர்கள் வேலையில் குறுக்கிடுகிறேனா?-அர்ஜூன்

By Chakra

இயக்குநர்களின் வேலையில் நான் குறுக்கிடுவதில்லை. அதே நேரம் என் அனுபவத்தின் அடிப்படையில் சில யோசனைகள் சொல்வது உண்டு. படத்தின் நன்மைக்காகத்தான், என்றார் நடிகர் அர்ஜூன்.

அர்ஜுன் நடிக்கும் 'வல்லக்கோட்டை' படம் ரிலீசுக்குத் தயாராகிறது. ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தை டி.டி.ராஜா தயாரித்துள்ளார்.

வல்லக்கோட்டை படத்தில் நடித்த அனுபவம் பற்றி அர்ஜுன் கூறியதாவது:

'வல்லக்கோட்டை' பக்கா கமர்ஷியல் படம். ஆக்ஷன், காமெடி, உணர்ச்சிகரமான சீன்கள் எல்லாம் இந்தப் படத்தில் உண்டு. வாத்தியார், துரை படங்களுக்கு பிறகு மூன்றாவதாக வெங்கடேசும், நானும் இதில் இணைந்துள்ளோம்.

வெங்கடேஷ் தயாரிப்பாளர்களின் இயக்குனராக உள்ளார். இப்படத்தை வித்தியாசமான கதைக் களத்தில் உருவாக்கியுள்ளார். நான் நடித்த 'கிரி' படம் மாதிரி இதில் வலுவான கதை இருக்கு.

ரசிகர்கள் நான் சண்டைக்காட்சிகளில் நடிப்பதை விரும்புகிறார்கள். ஆனால் எனக்கு சண்டை போடுவதை விட காமெடி கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கத்தான் விருப்பம். இந்த படத்தில் காமெடி நன்றாக வந்துள்ளது.

படப்பிடிப்பில் நான் தலையிட்டு சீன்களை மாற்ற சொல்வதாக பலர் குறை படுகின்றனர். அது தலையீடு இல்லை. சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. எனவே சினிமா மேல் உள்ள ஈடுபாடு காரணமாகத்தான் அப்படி நடந்து கொள்கிறேன். அதைத் தவறாக கருத வேண்டாம்.

படங்களுக்கு விளம்பரங்கள் முக்கியம். சில படங்கள் நல்லா இருக்கும். ஆனால் விளம்பரம் செய்தல், திட்ட மிடுதல் இல்லாமல் அவை தோல்வியாகியுள்ளன...", என்றார் அர்ஜூன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X