'காதல் போரடிக்குது...!' - த்ரிஷா

தமிழ், தெலுங்கில் ஒரு வெற்றிகரமான ரவுண்டை முடித்துவிட்டு இந்திக்குப் போகும் த்ரிஷா, இனி வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், "பிரியதர்ஷன் சார் என்னை இந்தியிலும் அறிமுகம் செய்கிறார். அவர்தான் என்னை தமிழில் அறிமுகப்படுத்தினார். இந்தியில் அக்ஷய்குமார் ஜோடியாக நடிக்கிறேன். இந்த படம் எனக்கு பெயர் வாங்கித்தரும் என்று நம்புகிறேன்.
சிம்பு ஜோடியாக தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்து முடித்து விட்டேன். அது வித்தியாசமான படம். அழகான காதல் கதை. இந்த படத்தில் மேக்கப் போடாமல் நடித்துள்ளேன்.
இப்போதெல்லாம் நிறைய வாய்ப்புகளை நிராகரித்து வருகிறபேன். காரணம் ஒரே மாதிரி காதல் காட்சிகளில் நடித்து போரடித்துவிட்டது. இன்னும் எத்தனை படங்களில் கதாநாயகனை விரட்டி விரட்டி காதலிக்கிற காட்சிகளில் நடிப்பது?
அதேநேரம் பெண்களுக்கு முக்கியத்துவம் என்று சொல்லப்படும் கதைகளும் எனக்கு வேண்டாம். காரணம் இங்கு ரசிகர்கள் வருவது அவரவருக்குப் பிடித்த ஹீரோவைப் பார்க்கத்தான். அதனால்தான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் எடுபடுவதில்லை..." என்றார்.


Click it and Unblock the Notifications











