கமல்ஹாசன் எனக்கு குரு, கூறுகிறார் திரிஷா
சிங்கப்பூரில் நடந்த மன்மதன் அம்பு பட ஆடியோ வெளியீட்டின்போது நான் பாடல் பாடியதற்கும், கவிதையை படித்ததற்கும் கமல்ஹாசன்தான் காரணம். அவர்தான் என்னை ஊக்குவித்தார். இதனால் அவரை எனது குருவாக மதிக்கிறேன் என்று கூறியுள்ளார் திரிஷா.
இந்தி திரிஷாவை கிட்டத்தட்ட கைவிட்டது போலாகி விட்டது. தமிழிலும், தெலுங்கிலும் இருந்த முதலிடத்தை திரிஷா எப்போதோ இழந்து விட்டார். இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார் திரிஷா. காரணம், கமல். அவருடன் சேர்ந்து நடித்துள்ள மன்மதன் அம்பு படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார் திரிஷா.
படத்தைப் பற்றி புகழ்ந்து பேசுவதோடு கமல்ஹாசனையும் வெகுவாகப் புகழ்கிறார். குறிப்பாக சிங்கப்பூரில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவின்போது தான் பாடல் பாடியதையும், கமலுடன் இணைந்து கவிதை வாசித்ததையும் கூறி சிலாகிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கமல்ஹாசன் தான் என்னிடம் அக்கறை காட்டி பாடவும், கவிதை வாசிக்கவும் ஊக்கம் கொடுத்தார். இதனால்தான் என்னால் அதை சிறப்பாக செய்ய முடிந்தது. இதனால் என்னைப் பொறுத்தவரை கமல் சார் ஒரு குரு.
இப்படத்தில் நான் வளரும் நடிகையாக நடித்துள்ளேன். சரியான ரொமான்டிக் காமெடி இது என்றார் திரிஷா.
திரிஷா இப்போது அஜீத்துடன் மங்காத்தா, தெலுங்கில் வெங்கடேஷுடன் சாவித்திரி ஆகிய படங்களில் நடித்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











