twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்சாருக்கு ராக்கி மிரட்டல்!

    By Staff
    |

    Rakhi Sawant
    எனது பாடலில் இடம் பெற்ற காமினி என்ற வரியை சென்சார் போர்டு கட் செய்துள்ளது. இது அநீதியாகும். இதை விட ஆபாசமான வரிகள், காட்சிகளையெல்லாம் சென்சார் அனுமதிக்கிறது. எனக்கு மட்டும் தடையா. நான் கடவுளின் பிள்ளை, என்னிடம் சென்சார் போர்டு வாலாட்ட வேண்டாம். ஒரு வாரத்திற்குள் இந்தத் தடையை நீக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பேன் என்று கவர்ச்சிப் புயல் ராக்கி சாவந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து ராக்கி அளித்துள்ள அணல் பறக்கும் பேட்டி...

    சென்சார் போர்டின் செயல் மிக மிகத் தவறு. ராக்கியை என்னவென்று நினைத்து விட்டார்கள் அவர்கள்?. அவர்களுக்கு இதுதொடர்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். இப்படி நடப்பது இதுவே முதல் முறையாகும்.

    சென்சார் போர்டின் செயலுக்கு மற்றவர்கள் பயப்படலாம். நான் பயப்பட மாட்டேன். நான் ராக்கி சாவந்த். நான் கடவுளின் புத்திரி. எனக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டேன்.

    காமினே என்ற வார்த்தையை பல படங்களில் தர்மேந்திரா பயன்படுத்தியுள்ளார். விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் அப்படி ஒரு படமும் வந்தது. அப்போதெல்லாம் சென்சார் போர்டு தூங்கிக் கொண்டிருந்ததா?.

    முதுகு முழுக்க திறந்து போட்டபடி பல நடிகைகள் நடிக்கிறார்கள். அதையெல்லாம் ஏன் அனுமதிக்கிறது சென்சார் போர்டு?.

    ஆனால் நான் எனது பாடலில் 'காமினி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் தடுப்பது என்ன நியாயம்?. என்னை அவமானப்படுத்தியுள்ளனர்.

    இஷ்கியா படத்தின் விளம்பரங்களில் வித்யா பாலன், முழுக்க முழுக்க ஈரத்துணியுடன் படு செக்சியாக காட்சி அளிக்கிறார், அதுவும் சேலையில். எல்லாம் அப்படியே தெரிகிறது. இதை நமது கலாச்சாரம் அனுமதிக்கிறதா?.

    சேலைக்குள் இருப்பதை சினிமாவில் அப்படியே காட்டலாம் என நமது கலாச்சாரம் கூறுகிறதா?. 'சோலி கே பீச்சே கியாஹே' என்ற பாடல் வந்தபோது சென்சார் போர்டு எங்கே போயிருந்தது?. அந்த வரியின் அர்த்தம் சென்சாருக்கு தெரியாதா?.

    பல வருடங்களாக அந்தப் பாடலை அத்தனை பேரும் ரசித்துக் கேட்டார்களே. சென்சார் அப்போது எங்கே போனது?. அந்தப் பாடலையெல்லாம் அனுமதிக்கலாம். ஆனால் எனது பாடலில் காமினி என்ற வரி மட்டும் வரக் கூடாது. இதென்ன நியாயம்?.

    உத்தரன், பைரி பியா, பந்தினி ஆகிய டிவி சீரியல்களைப் போய் பாருங்கள். இளம் பெண்களை சகட்டுமேனிக்கு அதில் கற்பழிப்பது போல காட்சிகள் உள்ளன, குறைந்த வயதுடைய பெண்களை கட்டாயக் கல்யாணம் செய்து வைப்பது போலலெல்லாம் காட்சிகள் வருகின்றன. அதெல்லாம் சரியா?.

    டிவி சீரியல்களில் நல்ல விஷயத்தையா காட்டுகிறார்கள்?. கள்ளக்காதலை பெரிதாக்கிக் காட்டுகிறார்கள். ஒருவர் ஐந்து கல்யாணம் செய்வதை பெரிதாக காட்டுகிறார்கள். மனைவியின் தலைமுடியைப் பிடித்து கணவன் சகட்டு மேனிக்கு அடிப்பதை திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள். இதெல்லாம் நமது கலாச்சாரமா?.

    டிவி சீரியல்களில் நடக்கும் அக்கிரமங்களை ஒழித்துக் கட்ட சென்சார் முன்வரட்டும். பின்னர் என்னிடம் வரட்டும்.

    ஊழல் மிக்க, ஆணாதிக்க மனப்பான்மையுடைய உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தார்மீக நெறிகளைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பு பாரபட்சம் இல்லாமல் அனைவரிடமும் ஒரே அளவுகோலை கையாள வேண்டும் என்று கொந்தளித்துள்ளார் ராக்கி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X