நல்ல நடிகர்கள் உருவாக வேண்டும்!-கமல்

By Staff

Kamal
தமிழ் திரையுலகில் புதிய நடிகர்கள் தங்கள் திறமை மூலம் எங்களையும் மீறி நல்ல நடிகர்களாக வர முயற்சிக்க வேண்டும், என்று கலைஞானி கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஹைதராபாத் சென்ற கமல், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

பல ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் பாலச்சந்தர் என்னையும் ரஜினியையும் அறிமுகம் செய்தார். இன்று வரை எங்கள் ஆட்சி தொடர்கிறது என்பது உண்மையே. இன்றைக்கு நிறைய புதியவர்கள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் திறமைகள் மூலம் என்னையும் ரஜினியையும் மீறி நல்ல நடிகர்களாக வர வேண்டும்.

ஐஎஸ்ஐ போதும் எனக்கு!

ஒவ்வொரு முறை ஆஸ்கர் குறித்து பேச்சு வரும்போதும் எனது படங்கள் குறித்தும் பேசப்படுகிறது. இதை நான் விரும்பவில்லை. காரணம் எனது படங்கள் அமெரிக்கர்களுக்காக எடுக்கப்படவில்லை.

இந்திய மக்களுக்காக எடுக்கப்படுகிறது. இந்தியர்கள் ஆமோதிப்பதில் கிடைக்கும் திருப்தியே எனக்குப் போதும். ஆஸ்கார் விருது என்பது அமெரிக்க தரத்திலான படங்களுக்கு வழங்கப்படுபவை. என் படங்களில் இந்தியத் தரத்தில் இந்தியர்களுக்காக எடுக்கப்படுபவை. எனக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறது. ஏ.எஸ்.ஐ. முத்திரை எதற்கு?

அதேபோல எனக்கு ஹாலிவுட் படங்களில் பேசுவது போல ஆங்கிலம் பேச வராது. ஒரு இந்தியன் பேசும் ஆங்கிலம்தான் வரும். நான் சீரியஸாகத்தான் இதைச் சொல்கிறேன்.

ஒரு பேச்சுக்கு கேக்கறேன்... ஹாலிவுட் நடிகர்களை தமிழ் தெலுங்கு பேசவைத்து இங்குள்ள படங்களில் நடிக்க செய்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நான் ஆங்கில படங்களில் நடித்தாலும் தெரியும்.

மர்மயோகி என்னாச்சு?

எனக்கு பொருளாதார ரீதியான சில கஷ்டங்கள் உள்ளன. அந்த கஷ்டங்கள் நீங்கியதும் எனது புதிய படங்கள் ஆரம்பமாகும். மருதநாயகம் படம்கூட கைவிடப்படவில்லை. மருதநாயகம் எனது கனவுப் படம் இல்லை. என் குழந்தை. அதில் என் இளமைப்பருவ காட்சியை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டேன். வயதான பாத்திரங்கள்தான் பாக்கி உள்ளன. அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். நிச்சயம் மருதநாயகமும் வரும், மர்மயோகியும் வரும்.

நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன். காரணம் எனக்கு நடிக்க மட்டும்தான் தெரியும், திரையில். தெரிந்த தொழிலை நிம்மதியாக செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X