'கிளாமர்' மோகம் மாறும் - விக்ரமன்

By Staff

Vikraman
தமிழில் இப்போது ஏற்பட்டுள்ள கவர்ச்சி மோகம் தற்காலிகமானது, விரைவில் அது மாறும் என்றார் டைரக்டர் விக்ரமன்.

விஜயகாந்த் நடிக்கும் மரியாதை படப்பிடிப்பிலிருந்த அவர் கூறியதாவது:

பொள்ளாச்சியை தொடர்ந்து மூணாறு, மற்றும் கேரள பகுதிகளில் மரியாதை படப்பிடிப்பு முடிந்து இப்போது காரைக்குடியில் நடக்கிறது.

வானத்தை போல, சூர்ய வம்சம் ஆகிய படங்களுக்கும், மரியாதைக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது. குடும்பத்தில் மூத்த அண்ணனாக வானத்தை போல படத்தில் அமைதியாக வருவார் விஜயகாந்த். இப்படத்தில் கம்பீரமான தந்தையாக வருகிறார்.

எல்லா இளைஞர்களுக்கும் இந்த அப்பாவைப் பிடிக்கும். கதையுடன் நகைச்சுவையும் இணைந்து வரும். நாயகி மீரா ஜாஸ்மின், ரமேஷ் கண்ணா, ஹீரோ விஜயகாந்த் என எல்லா கேரக்டர்களுமே காமெடியில் கலக்குவார்கள்.

இப்போதெல்லாம் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்தான் ஓடுகிறது என்கிறார்கள். ஒரு வகையில் அது உண்மைதான். கவர்ச்சிப் படங்களுக்கு ஓபனிங் நன்றாக இருக்கிறது.

பூவே உனக்காக இயக்கியபோது சிறு பட்ஜெட் படங்களுக்கு வரவேற்பு இல்லாமலும், பெரிய பட்ஜெட் மற்றும் கவர்ச்சி படங்களுக்கு மட்டுமே ஓபனிங் இருந்தது. அந்த டிரண்டில் திரைக்கு வந்த பூவே உனக்காக பெரிய வெற்றி பெற்றது.

நல்ல படத்துக்கு என்றைக்குமே தமிழ் ரசிகர்கள் வரவேற்பு தருவார்கள். கவர்ச்சி மோகம் விரைவில் மாறும். இந்த விக்ரமன் படங்களுக்கும் விரைவில் பழைய வரவேற்பு கிடைக்கும் என்றார் விக்ரமன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X