நான் சௌந்தர்யா மாதிரியாக்கும்! - விமலா ராமன்

கே பாலச்சந்தரின் பொய் படத்தில் அறிமுகமானவர் விமலா ராமன். படத்தின் தலைப்பைப் போலவே அவரது முதல் படத்தின் வெற்றியும் அமைந்துவிட, ஒரே படத்தில் ராசியில்லாத நடிகையாக்கப்பட்டு, பின்னர் மலையாளக் கரையோரம் ஒதுங்கினார். பின்னர் மீண்டும் ராமன் தேடிய சீதை மூலம் ஆழம் பார்த்தார். ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி வாய்ப்புகள் இல்லை.
இந்த நிலையில்தான், அவருக்கு ஆப்த ரக்ஷகாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் முதல் பாகம் ஆப்தமித்ராவில் நடித்தவர் மறைந்த சௌந்தர்யா.
அவரது வேடத்தின் தொடர்ச்சியில்தான் விமலா நடிக்கிறாராம்.
"இந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்காது. யோசித்துப் பார்த்தால் பல வகையில் நானும் சௌந்தர்யாவும் ஒரே மாதிரியானவர்கள்தான். அவர் விட்டுச் சென்ற இடத்தை இனி நான்தான் நிரப்பப் போகிறேன்..." எனும் விமலாவுக்கு மிகப்பெரிய ஆசை ஒன்றுள்ளதாம். அது.. "சூப்பர் ஸ்டார் ரஜினி சார் படத்துல நடிக்கணும்!"
ஆரம்பிச்சிட்டாங்கப்பா!


Click it and Unblock the Notifications











